அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மூளையில் ஸ்டண்ட் ! பிரமிக்க வைத்த திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை !

திருச்சியில் அடகு நகையை விற்க

என்னதான் மருத்துவத்துறையில் நவீனங்கள் புகுத்தப்பட்டாலும், நோய் பாதிப்பின் நிலை, நோயாளியின் தன்மை, சூழலுக்கு ஏற்ப என்ன வகையான சிகிச்சை முறையை கையாள்வது என்பதை சமயோசிதமாக தீர்மானித்து துணிச்சலான மருத்துவ நடைமுறையை பின்பற்றுவது என்பது சற்று சவாலான ஒன்றுதான்.

அந்தவகையில், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் 95% அளவுக்கு அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவருக்கு மூளையின் இரத்தக்குழாயில் வெற்றிகரமாக ஸ்டண்ட் பொருத்தி சாதனை படுத்தியிருக்கிறது, திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனை.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சாத்தியமானது எப்படி? என்பது குறித்து, மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் பொது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்  மற்றும் மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் பிரணவ் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து எடுத்துரைத்தனர்.

அவர்கள் பேசுகையில், ” திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல்  நோயாளி ஒருவருக்கு அதிநவீன கேத்லேப் சிகிச்சை முறையில் மூளை இரத்தக்குழாயில்  ஸ்டண்ட் பொருத்தி சாதனை படைத்துள்ளது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனைதிருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மூளை நரம்பியல் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. ஒரு கடினமான நோய் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை அட்டாக், நவீன மருத்துவத்துறை உதவியால் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வருகின்றோம். நோயாளி ஒருவருக்கு மூன்று மாதங்கள் முன்பே ஸ்ட்ரோக் அட்டாக் வந்துள்ளது. அப்போது மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களின் ஒன்றில் 95 சதவீதம் அடைப்பு ஏற்பட்டதை, இங்கே  உள்ள நவீன கேத் லேப்  மூலம் நோயை உறுதிப்படுத்தினோம். ஆரம்பத்தில் மருந்துகள் மூலம் இந்த அடைப்பை கட்டுப்படுத்தி நோயாளிக்கு பக்கவாதத்தை குணப்படுத்தினோம். ஆனால், ஒரு வாரம் முன்பு நோயாளிக்கு மீண்டும் ஸ்ட்ரோக் அட்டாக் வந்தது. அதுவும் முன்பை விட வீரியம் அதிகமாய்  வந்தது. அவருக்கு கூடவே இன்னொரு சிக்கலான  குடல் புண் ஏற்பட்டு  இரத்தம் கசிந்து கொண்டே பிரஷர் குறைந்துவிட்டது. இரண்டும் தனி பிரச்சனைகள் .

சிறப்பு மருத்துவ குழுவினர் ஆலோசனையில் குடல் புண் மற்றும் ஸ்ட்ரோக் சிகிச்சை அளித்துள்ளோம். மூளைக்கு செல்லும் முக்கிய இரத்தக்குழாய் ஆன (இன்டர்னல் கரோட்டிட் ஆட்ரி) இண்ரா க்ரானியல் பாகத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட் வைத்து ஸ்ட்ரோக் அட்டாக்கிலிருந்தும் குடல் புண்ணையும் மருந்துகள் மூலம் சரி செய்துள்ளோம்.

நோயாளிக்கு பேச்சு முழுமையாகவும், பலவீனமும் 90 சதவீதம் குணமடைந்துள்ளது. இதேபோல் பல நவீன நியூரோ இண்டர்வென்ஷன் மூளை  இரத்தக்குழாய் அடைப்பு சிகிச்சைகள், ஸ்ட்ரோக், அனுரிசம் மற்றும் இரத்த கசிவுக்கு சிகிச்சை அளித்துள்ளார் . மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த் கை மற்றும் கால்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு கேத் லேப் மூலம் சிறப்பு சிகிச்சை அளித்துள்ளார். எங்கள் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு நிலை மருத்துவப் பணியாளர்களின் கூட்டு முயற்சியில் மருத்துவத்துறையில், இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறோம்.” என்பதாக, தெரிவித்தார்கள்.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.