அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சுவிட்ச் முதல் வாஷ்பேஷன் வரை தங்கம் ! ஆச்சரியத்தில் அசத்தும் வீடு !

திருச்சியில் அடகு நகையை விற்க

தற்போது தங்கம் விற்கிற விலைக்கு ஒரு பவுன் தங்கம் வாங்குவதே மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தங்கத்தைக் கொண்டு ஒரு வீட்டை அலங்கரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ஒருவர்.

அதிசய வீடுஇது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோவின்படி, இந்தூரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் நுழைவு வாயிலிலேயே பசுமாடுகளுக்காக மின்விசிறி வசதியுடன் ஒரு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கார்களின் கலெக்ஷனைப் பார்க்க முடிகிறது. 1936 ஆம் ஆண்டு விண்டேஜ், மெர்சிடிஸ், பென்ஸ் உட்பட பல ஆடம்பர கார்கள் உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய 10 படுக்கை அறைகள் கொண்ட வீட்டின் சுவிட்ச் தொடங்கி வாஷ்பேஷன் வரை அனைத்து பொருட்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதிசய வீடுமேலும் இது குறித்து வீட்டு உரிமையாளர் கூறுகையில் ”24 கேரட் தங்கம் கொண்டு வீட்டின் பொருட்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டில் மொத்தம் 25 பேர், நான் ஒரு கட்டத்தில் வாழ்வதே கடினம் என்று நினைத்தேன் அதன் பின்னர் என்னோட கடினமான உழைப்பினால் அரசாங்க ஒப்பந்ததாரராக வேலையில் சேர்ந்தேன் அதன் பின்னர் சாலை போடுதல், பாலம் கட்டுதல் போன்ற அரசாங்க வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்கிறேன். தற்போது 300 அறைகளுடன் கூடிய ஹோட்டல் கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்” என்று பெருமையாக கூறுகிறார்.

 

  —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.