சதை உண்ணும் ஒட்டுண்ணி பாதிப்பு கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மனிதருக்கு தசை திசுக்களை உண்ணும் ஒருவகை புழு தொற்று ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை உறுதி செய்திருக்கின்றனர்.
எல் சால்வடோரில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்பிய ஒரு நோயாளிக்கு இந்த தொற்று இருப்பது ஆகஸ்ட் 4 அன்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு ஏற்பட்டிருப்பது நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் (NWS) என்ற ஒரு வகை ஒட்டுண்ணி ஈயால் ஏற்படும் தொற்று. இந்த ஈயின் புழுக்கள் (லார்வாக்கள்) உயிருள்ள திசுக்களை உண்ணுகின்றன. இதை மருத்துவத்தில் “மையாசிஸ்” அல்லது புழு தொற்று என்கிறார்கள்.
இந்த ஒட்டுண்ணி பெரும்பாலும் முதன்மையாக கால்நடைகளயே பாதிக்கிறது. ஆனால், அரிதாக மனிதர்களையும் தாக்கலாம். தற்போது அமெரிக்காவில் பொது சுகாதாரத்துக்கு இதன் ஆபத்து “மிகவும் குறைவு” என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention – CDC) மேரிலாண்ட் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த பாதிப்பை ஆய்வு செய்து வருகிறது.
— மு. குபேரன்