அங்குசம் சேனலில் இணைய

சிலந்தி கடியால் உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமெரிக்காவின் அயோவாவில் உள்ள ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவனான நோவா ஜான்சன் இவர் ஒருமுறை தனது சகோதரரின் நிறுவனத்தில் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராவிதமாக அவரது கன்னத்தில் ஒரு சிலந்தி கடித்துள்ளது. முதலில் சிலந்தி கன்னத்தில் கடித்ததை பெரிதாக கண்டுகொள்ளாத சிறுவனுக்கு சிறிது நாட்களுக்குப் பிறகு தொற்று ஏற்பட தொடங்கியிருக்கிறது. கடிப்பட்ட இடம் பெரிதாக வீங்கி இரண்டு கருப்பு துளைகள் வந்ததாகவும் இதனால் சிறுவனுக்கு வலி அதிகமானதாகவும் கூறப்படுகிறது.

நோவா ஜான்சன்
நோவா ஜான்சன்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதைத்தொடர்ந்து, சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அவருக்கு சிலந்தி கடியால் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அவருக்கு ஆன்டிபயாடிக் அளித்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று தீவிர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவர்கள் மாற்றியிருக்கின்றனர். மருத்துவர்கள் தொற்றைக் கண்டு பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி உள்ளனர். இருப்பினும் ஒரு நாள் கழித்து ஜான்சனின் சிறுநீரகங்கள் செயலிழக்க தொடங்கியதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

நோவா ஜான்சன்
நோவா ஜான்சன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதற்காக தற்போது அந்த சிறுவன் ஐசியூ-வில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் குடலில் ஒரு சிறிய தொற்று ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவரின் தொடர் சிகிச்சைக்காக அவருக்கு தேவையான உதவிகளை பெற GOFUNDME என்ற இணைய பக்கத்தை தொடங்கி சிறுவனின் நண்பர்கள் நிதி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

   —    மு.குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.