அங்குசம் சேனலில் இணைய

அமெரிக்காவில் ஒரு நபர் $5 மில்லியன் லாட்டரி வென்றவுடன் வாங்கிய முதல் பொருள்..?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாம் அனைவரும் பெரிய அளவில் பரிசு தொகையை வென்றால், முதலில் நாம் வாங்க நினைப்பது விலையுயர்ந்த பொருட்களே..! ஆனால் நான் சொல்லப்போறவரின் கதையே வேற…. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்தவர் 77 வயதான வால்டெமர் பட்டி, இவர் 5 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான லாட்டரி பரிசை வென்றார், அந்த பெரிய தொகையைப் பெற்றவுடன், அவர் வாங்கிய முதல் பொருள்..? தனக்கு ஒரு பழுத்த தர்பூசணி மற்றும் அவரது மனைவிக்கு ஒரு பூச்செண்டு என்றார்.

அமெரிக்க லாட்டரிகள்வால்டெமர் பட்டி  இந்த மாத தொடக்கத்தில் தனது நாயுடன் ஹோலி கிராஸ் வனப்பகுதியில் பேக் பேக்கிங் பயணத்தில் இருந்தபோது ​ வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் தனது பயணத்திலிருந்து திரும்பி வந்து இணையதளத்தைப் பார்க்கும் வரை தான் வெற்றிபெற்றதை அறியவில்லை, இணையதளத்தில் டிக்கெட்டை சரிபார்த்து பிறகு அவரின் வெற்றியை அவரால் நம்பமுடியவில்லை, இது ஒரு தவறாகதான் இருக்கும் என நினைத்ததார், ஆனால் அது எந்த தவறும் இல்லை அவர் தான் வெற்றியாளர் எனறு உறுதியானது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அமெரிக்க லாட்டரிகள்அமெரிக்க லாட்டரிகளில் வழக்கம் போல், வெற்றியாளரின் வசம் இரண்டு விருப்பங்கள் வைக்கப்படும், ஒரு பகுதி தொகையை ரொக்கமாக அல்லது முழுத் தொகையையும் பல ஆண்டுகளாக பெறுவது, மற்றொன்று மொத்த தொகையும் காசோலையாக பெறுதல், இதில் வால்டெமர் பட்டி இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்து $5 மில்லியனுக்கான காசோலையைப் பெற்றார். மேலும் அவர் பெற்ற பரிசு தொகையில் முதலில் தனக்கு ஒரு பழுத்த தர்பூசணி மற்றும் அவரது மனைவிக்கு ஒரு பூச்செண்டு வாங்கிய பிறகு அவரது மனைவிக்கு சில அறுவை சிகிச்சைகளுக்கு செலவிட உள்ளார், மேலும் அவருக்குத் தேவையான சில உதவிகளை இப்போது வழங்க முடிந்ததில் அவர் மகிழ்ச்சியடைகிறார். மீதமுள்ள தொகையை சில தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப் போகிறேன், பின் முழுமையாக என் வாழ்நாளை தன் மனைவியுடன் கழிக்கப்போகிறேன் என்றார்.

 

   —     மு.குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.