அம்மா – தஞ்சை ஹேமலதா
🌹🌹🌹🌹🌹
அம்மா
🌹🌹🌹🌹🌹
குருவிகளின்
கூடு
அம்மா
பாசத்தின்
தேரு
தாய்மையின்
வீடு
தூளியின்
கதகதப்பில்
அம்மாவின்
கைகள்
புடவை
சகோதர உறவு
நரம்புகளின்
கொடி
வளந்தப்பின்னே
நன்றியை
மறக்கும்
சுயநலத்தின்
படி
தோட்டத்தின்
விதை
வயலில்
களையெடுத்து
பிள்ளை கதீா்
வளா்க்கும்
அம்மா
தாலாட்டு
பாட்டில்
சொக்க வைக்கும்
அம்மா
நாத்து நடும்
கைகள்
நகரத்தில்
படிக்க வைக்கும்
கைநாட்டு
அம்மா
எங்கள்
குலதெய்வம்
கோவிலை காட்டி
விட்டு
தெய்வமான
அம்மா
குலதெய்வம்
அம்மா
— தஞ்சை ஹேமலதா.