ஜாதி வாரியாக கணக்கெடுப்பு பற்றி பேசிய அன்புமணி ராமதாஸ் !
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை, நெல்லை, தொடர்ந்து கன்னியாகுமரியில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நடைபயணத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தக்கூடாது. தனியார் இடங்களில், நடத்திக் கொள்ளுங்கள் எனநீதிமன்றம் கூறுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், எங்களைப் போன்ற கட்சிகள் எல்லாம் மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று தான் பிரச்சாரம் நடத்த முடியும் அப்போதுதான் ஆளும் கட்சி என்னென்ன ஊழல்கள் செய்துள்ளது என மக்கள் முன் சொல்ல முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உணவளிக்கும் கடவுளான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பது மிகப்பெரிய துயரம் ஒரு விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது எனக் கவலை தெரிவித்தார்.

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம் இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது வருத்தகரமானது. தமிழ்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது 100% பொய்யாகும். இது ஜாதிப் பிரச்சினை அல்ல. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை அடையாளம் காணும் முயற்சிதான் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு என்றார்.
அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை குறித்து கேட்கும்போது, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் நார்மல் செக்கப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழைய நிலைதான் உள்ளது. இன்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்தது நல்லது என தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.