அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் வார சந்தைக்கு அடுத்தடுத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் ஒரு அறையில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல் பட்டு வருகிறது. இந்த மையத்தில் 67 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஒரு சிறிய அறையில் கால்நடைகளை அடைத்து வைப்பது போல குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது.

அங்கன்வாடி குழந்தைகள் மையம்
அங்கன்வாடி குழந்தைகள் மையம்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேலும் அறைக்குள்ளே அங்கன்வாடி மையத்திற்கு தேவையான சுற்றி வைக்கப்பட்டுள்ளதால் இடம் நெருக்கடியால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெருக்கடியான கட்டடங்களுக்கு இடையில் ஒரு சிறிய அறையில் ஒதுக்குப்புறமாக குழந்தைகள் மையம் செயல்பட்டு வருவதால் பெற்றோர்கள்  குழந்தைகளை விடுவதற்கும் வெளியே அழைத்து வருவது சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் உள்ளது. அங்கன்வாடி குழந்தைகள் மையத்திற்கு போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சமுதாயக்கூடம்
சமுதாயக்கூடம்

Admission Enquiry Form

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தின் முன்பு சமுதாயக்கூடம் பல ஆண்டுகளாக சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலை உள்ளது. நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு  செல்லக்கூடிய குழந்தைகள் ஒரு அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே  சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் – எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும் குழந்தைகள். இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்றிவிட்டு அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை.

 

—   மணிபாரதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.