மோடியின் ’டிஜிட்டல் இந்தியா’ கேவலங்கள், பரிதாபங்கள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அரை லூசுகள் அரசாண்டால் உலகமே  முழு லூசாகிச் சாகும் என்பதற்கு உதாரணம் தான் அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப். இவரின் எண்ணெய் வெறியால் இப்போது வளைகுடா நாடுகள் மொத்தமும் பற்றி எரிகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விலையேற்றம், கள்ளமார்க்கெட்டில்  கேஸ் சிலிண்டர்களின் தாறுமாறான விலையேற்றத்தால் இந்தியாவில் தினந்தோறும் நொந்து நொம்பலப்படுகிறது நடுத்தர வர்க்கம். இதெல்லாமே நம்மை ஆளும் மோடிக்குத் தெரிந்தும் “கொரோனா காலத்தில் 140 கோடி இந்தியர்களும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருந்ததைப் போல இப்போதும் இருக்க வேண்டும்” என மக்களுக்கு அறிவுரையை அள்ளி வழங்குகிறார் நம்ம மோடி ஜீ.

பரப்புரையில் மோடிமோடி  இப்படி ஒரு உருட்டு உருட்டிய மறுநாளே உலகின் சக்தி வாய்ந்த பிரதமர்களில் நான்காவது இடத்தில் நம்ம மோடி ஜீ இருப்பதாக நம்மைச் சாகடிக்கும் மீடியாக்கள் உருட்டும் உருட்டு இருக்கே…. இதுக்குப் பதிலா அங்கே நடக்கும் போரில் கூட செத்துப் போயிரலாம்னு நினைக்குற அளவுக்கு உருட்டுறாய்ங்க மீடியா புண்ணியவாளன்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சரி போய்த்தொலையுறாய்ங்க…. இப்ப நம்ம வயித்தெரிச்சலச் சொல்லுவோம்…

வளைகுடா போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்கும் மேலாகிவிட்டன. சாதாரணமாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை புக் பண்ணி நான்கு அல்லது ஐந்து நாட்களில் டெலிவரி ஆகிவிடும். 860 ரூபாயாக இருந்த வீட்டு சிலிண்டர்,  போர் ஆரம்பித்த சில நாட்களிலேயே 920 ஆனது. இது மாநகரங்களில் மட்டுமே. நகர்ப்புறங்களிலும் பேரூராட்சிப்பகுதிகளிலும் 1,010, கிராமப்புறங்களில் 1,100 என எகிறியது. அதே போல்  ரூ.1,800-ஆக இருந்த வணிக சிலிண்டர், 2,100 ஆகி, 2,400 வரை எகிறி இப்போது கள்ள மார்க்கெட்டில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை எகிறி மக்களை வயிறு எரிய வைத்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான கேஸ் ஏஜெண்ஸிகளை பிஜேபி கும்பல் கைப்பற்றிவிட்டது. இந்தியா முழுவதும் கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்களை விற்று இந்த நாற்பது நாட்களில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்துள்ளது பிஜேபி கும்பல்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விறகு அடுப்பு, புல்லட் அடுப்பு!
விறகு அடுப்பு, புல்லட் அடுப்பு!

சென்னை உட்பட எல்லா பெருநகரங்களிலும் ஓட்டலில் உணவுப்பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டன. இதனால் நடுத்தர மக்களின் நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாகிவிட்டது. எல்லாத்துக்கும் காரணம் கள்ளமார்க்கெட் கும்பலின் கைங்கர்யம் தான். கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் வாங்கியும் ஓட்டல் நடத்தி பிழைக்க வழியில்லாததால் இப்போது சிறு ஓட்டல்காரர்கள் தெருவில் விறகு அடுப்பைப் பற்ற வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்பெல்லாம் 100 லிருந்து 125 ரூபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ விறகு இப்போது 600—700 ஆகிவிட்டது. இன்னும் சில ஓட்டல்களிலோ கோயம்புத்தூர் தயாரிப்பான ‘புல்லட் அடுப்பு’ புழக்கத்திற்கு வந்துள்ளது. இதன் விலை ரூபாய் 30 ஆயிரம்.

இந்த இரண்டு அடுப்புகளுக்கும் வழியில்லாத சிறு ஓட்டல் முதலாளிகள், வயிறெரிந்து, மனம் நொந்து ஓட்டல்களை மூடிவிட்டார்கள்.

இதான் நம்மை ஆளும் மோடிஜீயின் டிஜிட்டல் இந்தியா பரிதாபங்கள், கேவலங்கள்…

—  சிலிண்டர்பட்டியான்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.