தைரியமும் தன்னம்பிக்கையும் தான் காரணம் “யூத்” தயாரிப்பாளர் கருப்பையா!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘பார்வதா எண்டெர்டெய்ன்மெண்ட்’ கருப்பையா சி.ராம் தயாரித்து, கென் கருணாஸ் ஹீரோவாக நடித்து டைரக்ட் பண்ணி, மார்ச்.19-ஆம் தேதி ரிலீசான ‘யூத்’ தமிழ்நாடெங்கும் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி, 50 கோடி ரூபாய் கலெக்‌ஷனையும் அள்ளியுள்ளது. இதனால் ஹேப்பியான கருப்பையாவும் கென்னும் ‘யூத்’ சூப்பர்ஹிட்டான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி சொல்லவும் சென்னையில் மார்ச்.31-ஆம் தேதி மதியம் ‘தேங்ஸ் கிவிங்’ நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி சேத்தன், நளினி, ஹீரோயின்களில் ஒருவரான மீனாட்சி தினேஷ் மற்றும் படத்தின் நடித்த கென்னின் நண்பர்கள் பட்டாளம், டெக்னீஷியன்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதில் பேசியவர்கள்…

சுராஜ் வெஞ்சரமூடு
சுராஜ் வெஞ்சரமூடு

சுராஜ் வெஞ்சரமூடு, “இளைஞர்களான கருப்பையாவும் கென்னும் இணைந்து இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் வைத்த  நம்பிக்கையும் தைரியமும் ‘யூத்’தின் சூப்பர்ஹிட்டுக்குக் காரணம். இவர்கள் இருவரும் இன்னும் உயரத்திற்குச் செல்வார்கள்”

தேவதர்ஷினி, “காசே இல்லாத நிலையிலும் கென்னின் கதையை நம்பி களம் இறங்கிய கருப்பையாவுக்கு கிடைத்த வெற்றியை நினைத்து மிகவும் மகிழ்ச்சியா இருக்கு”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நளினி, “படத்திற்காக உழைத்த அத்தனை பேரையும் குறிப்பிட்டு நன்றி சொன்ன கருப்பையாவின் மனசு ரொம்ப பெருசு. இதான் இந்த மாதிரியான இளைஞர்களுக்குத் தேவை”.

தேவதர்ஷினி
தேவதர்ஷினி

மீனாட்சி தினேஷ், “இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த ‘யூத்’ தான் தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துள்ளது”.

கருப்பையா, “எங்களின் முதல் தயாரிப்பே 50 கோடி வசூல் செய்திருப்பது சாதனை தான். தமிழில் மட்டுமல்ல, இப்போது தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது அதைவிட சந்தோஷம். நாங்கள் எப்போதுமே அதிகமாக யோசிக்கமாட்டோம். ஆனால் தைரியமாக முடிவு எடுத்தோம், நம்பிக்கையுடன் செயல்பட்டோம். அதான் இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து மிகப்பெரிய ஹிட்டாக்கிய மீடியாக்களுக்கு நன்றி. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் டைரக்டரும் ஒரு தயாரிப்பாளர் தான்”.

கென் கருணாஸ்
கென் கருணாஸ்

கென் கருணாஸ், “மீடியாக்களின் பாஸிட்டிவான விமர்சனங்களால் தான் இந்தப் படம் மக்களிடம் போய் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிப்பயணத்தில் பலருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்” என்று சொல்லி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயரைச் சொல்லி நன்றி சொன்னார் கென். அத்துடன் தனக்கு டைரக்‌ஷனில் உதவியாக இருந்த கேங், கேமராமேன் அஸிண்டெண்ட்டுகள், செட் அஸிண்டெண்டுகள், தயாரிப்பு அஸிண்டெண்டுகள் என அனைவரையும் மேடையில் ஏற்றி கெளரவப்படுத்தினார் கென்.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.