” நான் திமிர் பிடித்தவன் தான்” டைரக்டர் அட்லீ சொன்னது!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அக்டோபர்-01ஆம் தேதி ரிலீஸான விஜய் சேதுபதி யின் ‘பத்தா’ நான்கு நாட்களில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வசூலில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதனால் வெரி ஹேப்பியான படக்குழுவினர் சென்னை வேளச்சேரி வெஸ்ட் இன் ஹோட்டலில் சக்சஸ் மீட் நடத்தினர். இதில் கேமரா மேன் செல்வக்குமார், புரொடக்சன் டிசைனர் முத்துராஜ், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நடிகர்கள் அர்ஜுன் சிதம்பரம், விஷ்ணு, பேபி சஹஸ்ரா, மாஸ்டர் சாய் பிருத்விராஜ், டிசைனர் கோபி பிரசன்னா ஆகியோர் சுருக்கமாக பேசினார்கள். அதன் பிறகு பேசியவர்கள்…..

பத்தாதயாரிப்பாளர்  முராத் கெதானி

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

“என்னை இந்தத் தயாரிப்பில் இணைத்ததற்கு அட்லீக்கு நன்றி. இந்த நல்ல படப்பிடிப்புக் குழுவில் நானும் பங்கேற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இயக்குநர் பாலாஜி தரணீதரன், ஹீரோ விஜய் சேதுபதி, புரொடக்சன் டிசைனர் முத்துராஜ் மற்றும் அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படம்”

 லிஜோ மோல் ஜோஸ்

“இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி,மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. விஜய் சேதுபதி சாரின் அருகில் இருப்பது ஒரு மேஜிக் போல் உணர வைக்கும். அவர் சக கலைஞர்களுக்கு கொடுக்கும் இடமும் சுதந்திரமும் என்னை ஆச்சரியப்படுத்தியது.  இந்தப் படம் இன்னும் அதிகப் பேரிடம் போய்ச் சேர வேண்டும். மேலும் மேலும் பார்க்க வேண்டும். பார்த்தவர்கள் பார்க்காதவர்களிடம் கூற வேண்டும்”

இசையமைப்பாளர் சாய் அப்யங்கர்

” முதலில் என்னை இயக்குநர் நம்பவில்லை. வேறு ஒருவரை வைத்து செய்வதாக இருந்தது. நான் ஒவ்வொரு பாடல் மூலமும் அவரிடம் நம்பிக்கை வரவைத்தேன். பிறகுதான் அவர் பின்னணி இசை அமைக்கவே சம்மதித்தார்”.

இயக்குநர் பாலாஜி தரணிதரன்
இயக்குநர் பாலாஜி தரணிதரன்

இயக்குநர் பாலாஜி தரணிதரன்

“இந்த வாய்ப்பு கொடுத்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. என்னிடம் குறைவாக இருப்பது, அட்லீயிடம் அதிகமாக இருப்பது, நேர்நிலை எண்ணம்தான். முதலில் சேதுவிடம் கதை சொன்னேன். அவர் நண்பர் என்பதால் ஓகே செய்துவிட மாட்டார். அவருக்குப் பிடித்துப் போனதால் அட்லீயிடம் அழைத்துக் கொண்டு சென்றார். விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில்  ஏற்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன். அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்”.

விஜய் சேதுபதி

“எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன்  கணவன் காத்திருப்பது போல் இருக்கும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள்.  நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.

இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். இந்த ‘பத்தா’ வையும் சேர்த்து பாலாஜி இயக்கிய மூன்று படங்களும் அற்புதமானவை என்பதில் சந்தேகமில்லை”.

தயாரிப்பாளர் அட்லீ,

“எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.  அதற்குப் பெயர் திமிர் என்றால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

அட்லீ
அட்லீ

நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.

சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். அவர் நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.

இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.