கே.ஜே.ஆர்-ன் இரண்டாவது படம் ஆரம்பம்!
‘அங்கீகாரம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கே.ஜே.ஆர். இவரின் இரண்டாவது படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தைத் தயாரித்த ‘மினி ஸ்டுடியோஸ்’ வினோத்குமார் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். ‘விலங்கு’ வெப் சீரிஸ், சமீபத்தில் ரிலீசான சூரியின் ‘மாமன்’ படங்களின் டைரக்டர் பிரசாந்த் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்த ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக புரமோட் ஆகியுள்ளார்.
கே.ஜே.ஆருடன், அர்ஜுன் அசோகன், ஸ்ரீதேவி, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ்குமார், பிருத்விராஜ், இந்துமதி, அஜு வர்கீஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இன்னும் பெயர் வைக்காத இப்படத்தின் ஒளிப்பதிவு : பி.வி.சங்கர், இசை : ஜிப்ரான். பி.ஆர்.ஓ.: ’யுவி கம்யூனிகேஷன்’ யுவராஜ்.
— மதுரை மாறன்