பெண்ணுடன் தனி அறையில் குத்தாட்டம் போலீஸ் சஸ்பெண்ட் !

 பெண்ணுடன் தனி அறையில் குத்தாட்டம் போலீஸ் சஸ்பெண்ட்..

திருச்சி மாநகர காவல்நிலைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது செக்ஷன் கோர்ட் காவல் நிலையம். இதில், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக இருப்பவர் முதல்நிலை காவலரான சகலாகலா நடிகரின் பெயரை கொண்டர். இவர் நேற்று ( 26.10.2025 )  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தனி அறை எடுத்து தங்கியுள்ளார்.

அவருடன் சம்பந்தப்பட்ட ஹோட்டலின் மேனேஜர் மற்றும் ஒரு இளம்பெண் ஆகியோர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். ஒருக்கட்டத்தில் போதை மண்டைக்கு ஏற அருகில் இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர். உடனே அந்தப் பெண் சத்தம்போட்டு கதற, அருகில் உள்ளவர்கள் பெண்ணை மீட்டு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்மூலம் சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பை நியூஸ் –

Comments are closed, but trackbacks and pingbacks are open.