2 ஸ்டார் அதிகாரி செய்யும் அட்ராசிட்டி !

மாங்கனி மாவட்டத்தில் உள்ள ஆண்கள் சிறைச்சாலையில் சமீபத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் இருந்து வருகின்றனராம்.

இவர்களில் 2 ஸ்டார் அதிகாரி செய்யும் அட்ராசிட்டி சிறைத்துறை அதிகாரிகளையே கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறதாம். சிறைக்குள் வந்த அதிகாரி முதலில், எங்களை குற்றசம்பவங்களில் வந்தவர்களுடன் போடாமல் தனி பிளாக்கில் போடும்படி கட்டளையிட்டுள்ளார்.

அதற்கு காரணமாக எங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர். அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கு என்று கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் 3 பேரும் 10 ஆம் நம்பர் பிளாக்கிள் தனித்தனியாக போடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்க்க வேண்டும் என்று அனுமதி வாங்காமலேயே சில காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்துள்ளனர். அதில், தூங்கா நகரத்தை சேர்ந்த ’ஸ்’ புள்ளி டிஎஸ்பி, மற்றொருவர் ”கிரி” மாவட்டத்தை சேர்ந்த மணி யான இன்ஸும் ஆவார்கள். ஆனால், சிறைத்துறை அனுமதி அளிக்கவில்லையாம்.

இருப்பினும், அதே சிறையில் அதிகாரியாக இருக்கும் இளமான எஸ்எஸ்ஐ ஒருவர் தான், லஞ்ச வழக்கில் வந்தவர்களிடம் தகவலைப் பெற்று அவரது ஆதரவாளர்களுக்கு வழங்கி வருகிறாராம்.

-ஸ்பை டீம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.