திருச்சி – கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோயானது வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஓர் கொடிய நோயாகும்.  நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல்,வாயில் உமிழ்நீர் வடிதல்,பால் குறைதல் மற்றும் சினைபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே இக்கொடிய நோயிலிருந்து தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு அனைத்து விவசாய பெருமக்களும், கால்நடை வளர்ப்போரும் தங்கள் கால்நடைகளுக்குகால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிபோட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடப்படுவதனால் கறவைமாடுகள் குறைவாகபால் கறக்கும் என்ற அச்சமோ,சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் என்ற அச்சமோ தேவையில்லை.  இத்தடுப்பூசியினால் 100 சதவீதம் தங்களது கால்நடைகளைகால் மற்றும் வாய் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.  தேசிய கால்நடை  நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தில் 3வது சுற்றுதடுப்பூசி பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கோமாரி நோய் தடுப்பூசிமுகாம்
கோமாரி நோய் தடுப்பூசிமுகாம்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும், இந்த 6வது சுற்றுதடுப்பூசி போடும் பணியானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து குதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுமார் 3 இலட்சத்து 11 ஆயிரம்  கால்நடைகள் பயன்பெறவுள்ளன.  இத்தடுப்பூசி பணியானது 16.12.2024 முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையினரால் காலை 6.00 மணிமுதல் 9.30 மணிவரையிலும்,பிற்பகல் 3.00 மணிமுதல் 5.00 மணிவரையிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.  கால்நடைதடுப்பூசிபணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களிலும்,கால்நடை மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோட்டுக் கொள்வதன் மூலம் இந்நோயினை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசிபோட்டுதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு கால்நடையும் இந்நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தங்கள் கிராமத்தை தேடிவரும் கால்நடைஉதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்டஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.