அனிருத் இசை நிழக்சி! டிக்கெட் விற்பனையில் சாதனை!
தமிழ் சினிமாவின் அதிரடி மியூசிக் டைரக்டர் ‘ராக் ஸ்டார்’ அனிருத், சமீபத்தில் அமெரிக்காவில் பிரம்மாண்ட இசை நடத்தினார். தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் இசையமைப்பதால், அனிருத்துக்கு அகில இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படிப்பட்ட அனிருத்தின் அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, வரும் 26—ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை என்னும் இடத்தில் ‘ஹுக்கும்’ என்ற பெயரில் நடக்கவுள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை ஜூலை.08-ஆம் தேதி ஆன் லைனில் தொடங்கியது. விற்பனை தொடங்கிய 45 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று சாதனை படைத்துள்ளது. இன்னும் அதிகமான இருக்கைகள் ஏற்பாட்டுடன், கூடுதலாக டிக்கெட்டுகள் கிடைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டும் என அனிருத்தின் ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பதிவு போட்டு வருகின்றனர்.
— மதுரை மாறன்