அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஊழல் ஒழிப்பு : சமூகப் பொறுப்பா, அரசுப் பொறுப்பா ?

திருச்சியில் அடகு நகையை விற்க

மத்திய அரசின் இந்திய மின் பகிர்மான நிறுவனக் குழுமம் பவர் கிரிட் நிறுவனம் (Power Grid Corporation of India Ltd.) சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 28.10.2025 (செவ்வாய்க்கிழமை) கரூர் அரசு கலைக் கல்லூரியில் கரூர் பரமத்தி பவர் கிரிட் நிறுவன துணைப் பொது மேலாளர் அருள்குமரன், மேலாளர் ஜோபி தேவசி மற்றும் இளநிலைப் பொறியாளர் வெங்கண்ணசாமி முன்னிலையில் மாணவர்களிடையே ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியானது ஏற்கப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழிஅதனைத் தொடர்ந்து “ஊழல் ஒழிப்பு என்பது சமூகப் பொறுப்பா, அரசுப் பொறுப்பா அல்லது கூட்டுப் பொறுப்பா” என்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. இவ்விவாத மேடையில் பல்வேறு மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது விழிப்புணர்வுப் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழிஇப்போட்டியில் வெற்றிப்பெற்று முதல் பரிசு பெற்ற ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ர.பிருந்தா ஸ்ரீ, இரண்டாம் பரிசு பெர்ற இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவர் சேது விநாயகம் மற்றும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆறுதல் பரிசானது கல்லூரி முதல்வர் முனைவர் சா.சுதா தலைமையில் கரூர் பரமத்தி பவர் கிரிட் நிறுவன துணைப் பொது மேலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறைத் தலைவர் முனைவர் கு.ஜாகிர் உசேன், கௌர விரிவுரையாளர் மு.ராஜேஸ்வரி மற்றும் ஆ.சுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.