2 உயிர்களை இழந்தோம்… மீண்டும் டாஸ்மாக் வேண்டுமா?

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், அழுந்தூர் ஊராட்சியின் யாகப்படையாம்பட்டி கிராமத்திற்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் தகவலுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் கடை அமைந்தால் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்றும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அருகிலுள்ள பகுதியில் டாஸ்மாக் கடையால் தங்கள் குடும்பங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகப் பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மூன்று முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

2 உயிர்களை இழந்தோம்… மீண்டும் டாஸ்மாக் வேண்டுமா? கதறும் பெண்கள்!

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.