ரவிசங்கர் மீதான புகார்! எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் சம்மனா?

துணை சபாநாயகர் விவகாரத்தில் புதிய திருப்பம்: விசாரணைக்கு வந்தவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக கார்த்திக் குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். குடிநீர் மற்றும் சாக்கடைப் பிரச்சினைகள் தொடர்பாக மனு அளிக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை FIR பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில், காவல்துறை சம்மனை ஏற்று கார்த்திக் குமார் தனது வழக்கறிஞர் பொன். முருகேசனுடன் இன்று திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். ஆனால், ஏடிஎஸ்பி வேறொரு கொலை வழக்கு விசாரணைக்காகச் சென்றிருந்ததால், பின்னர் விசாரணை நடத்தப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அவர் திரும்பிச் சென்றார்.

மேலும், தாக்குதல் சம்பவத்தின்போது ரவிசங்கரின் மகனும் கட்டையை எடுத்துக் கொடுத்து தாக்கச் சொன்னதாகக் கார்த்திக் குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவரது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

FIR பதிவு செய்யாமல் விசாரணைக்கு சம்மன் அனுப்பியிருப்பது விதிமீறல் எனக் கூறிய வழக்கறிஞர் பொன். முருகேசன், இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தெரிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.