விடுமுறைக்கு மேல் விடுமுறை… உழைப்பது எப்போது?

விடுமுறைகளைக் கொண்டாடுவதில் காட்டும் ஆர்வம் உழைப்பில் இல்லையா?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சனி , ஞாயிறு இருநாட்கள் விடுமுறை. அரசாங்கம் திங்கள் விடுப்பு என்கிறது. நீதிமன்றம் வெள்ளியும் விடுப்பு என்கிறது. தீபாவளிக்காக இப்படியா உழைக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ்வது?   ஒரு வழக்கை நடத்த ஒரு மணித்துளிக்கு பல இலட்சம் ரூபாய் செலவழிகிறது எனச் சொல்லும் நீதிமன்றம், வழக்குகளை நடத்த விரும்பாமல் விருப்பத்திற்கு விடுப்பு எடுப்பது என்ன நியாயம்?

ஆயுத பூசைக்கு 10 நாட்கள், தீபாவளிக்கு 4 நாட்கள் ( வார இறுதி சேர்ந்து), கிறிஸ்துமஸ் வந்தால் 10 நாட்கள். கிறித்தவ மதம் 100 சதம் உள்ள நாடுகளில் கூட 10 நாட்கள் விடுமுறை இல்லை. டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 தான். இங்கோ பத்து நாட்கள். வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு மகிழ்ச்சி. இவர்களின் உயர்வுக்கும், ஊதியத்திற்கும் காரணமாக உள்ள மக்கள்? அவர்களுக்கும் மகிழ்ச்சியே! காரணம், மதம்.  இந்தியாவை மதம் “பிடித்து” ஆட்டுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

யாருக்கும் உழைக்க விருப்பம் இல்லை. வியாபாரிகளும், புரோகிதர்களும் இலாபமடைய கண்டுபிடித்த மத வழிப் பண்டிகைகள் உழைப்பற்ற இந்தியாவை உருவாக்கி வைத்துள்ளன.

பண்டிகை கால வியாபாரம் , வியாபாரிகளை மகிழ்விக்கிறது. அதானால்தான் மார்வாடிகள் சொழிக்கிறார்கள். உழைப்பவன் கடனாளியாக சாகிறான்.

—  கன்னியப்பன் இளங்கோவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.