SIR-க்குள்ளிருந்து மீள்வது எப்போது? வாக்குப்பெட்டிதான் தீர்வா?
தேர்தல் வெற்றி, தோல்விக்கு ஏற்ப மாறும் அரசியல் நிலைப்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்பட வேண்டுமா?
“தலைமை தேர்தல் அதிகாரியை பதவிநீக்க வேண்டும். வாக்குப்பெட்டி முறை மீண்டும் வேண்டும். EVM இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது” என்கின்ற போர்க்குரல் தினமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
2013-ல் மத்தியில் காங்கிரஸ் ஆளுகையில், தில்லி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணியின் போது 13.58 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுந்தபோது, ”வீடு வீடாக ஆய்வு நடத்தி, உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி, பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து 13.58 இலட்சம் பேர் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் இறந்த அல்லது இரட்டைப்பதிவான (ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர் இருந்தவர்களை) கண்டறிந்து, ஆய்வுக்குப்பின்னரே நீக்கம் செய்யப்பட்டது. சம்மந்தப்பட்டவர்களுக்கு முறையே தகவல் தெரிவித்து, தவறு கண்டறியப்பட்டால் மீண்டும் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 22, மற்றும் பிரிவு 24 ன் குறிப்பிட்ட விதிகளின்படியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.” என்பதாக, பதிலளித்தார் அப்போதைய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கபில்சிபில்.
தேர்தல் ஆனையத்துடன் இணைந்து அரசு செயல்படதொடங்குவது தவறான முன் மாதிரிஅரசியலமைப்பின்படி முழுசுதந்திரம் அளிக்கப்பட்ட அமைப்புதான் தேர்தல் கமிஷன். அதில் அரசு தலையிட முடியாது.
உங்கள் கூற்றுப்படி மாகாண தேர்தல்களை ரத்து செய்து, பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு மறுதேர்தல் வந்தால் மக்கள் என்ன ஆவார்கள்? ஏற்படும் செலவினங்களை, பொருளாதாரநெருக்கடியில் யார் சுமப்பார்கள்?
EVM மிஷினில் வென்றால் வெற்றி விழா. தோற்றால் வாக்குப்பட்டி மீது மோகமா? என்ன அரசியல் அசிங்கம்? என்ன முரன்பாடுகள்? மக்கள்தான் உங்களை என்ன நினைப்பார்கள்?
கல்வி அறிவும், பொருளாதார முன்னேற்றமும், அரசியல் கட்சிகளின் அபரிதமான வளர்ச்சியும், எவ்வளவோ முன்னோடியாக போய்க்கொண்டிருகிறது. விஞ்ஞான யுகத்தில் தவறுகளை கண்டறியாலாம். சுட்டிக்காட்டாலாம். ‘வாக்குப்பெட்டியை எடு’ என்றால் எவ்வளவு பிற்போக்கத்தனம்? மக்களை துன்புறுத்தி ஏமாளி ஆக்கிவிடாதீர்கள்.
— மதுரை P.அருணாச்சலம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.