தமிழக அரசின் சிறப்பு செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ! விளம்பரமா ? அவசியமா ?
தமிழக அரசின் சார்பில், பல்வேறு விவகாரங்களில் அரசின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான சரியான விளக்கத்தை வழங்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நால்வரை சிறப்பு செய்தி தொடர்பாக தமிழக அரசு நியமித்திருக்கிறது.
மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்ச்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை செயலர் தீரஜ்குமார், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் அமுதா ஆகியோர்தான் அந்த அதிகாரிகள்.
ஏற்கெனவே, பி.ஆர்.ஓ.க்கள் இருந்து வரும் நிலையில் இது தேவைதானா? இந்த அரசு விளம்பரத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறதா? என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த பின்னணியில், சிறப்பு செய்தி தொடர்பாளர்கள் நியமனம் குறித்து அலசுகிறது, அங்குசம் ஆடுகளம்.
முழுமையான வீடியோவை காண
தமிழக அரசின் சிறப்பு செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ! விளம்பரமா ? அவசியமா ?
— அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு.