முன்பதிவு செய்து அரசுப் பேருந்தில் பயணித்தவரா, நீங்கள்? வெளியானது அதிர்ஷ்டசாலிகளின் பட்டியல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024 ஆகஸ்டு மாதத்தில் முன்பதிவு செய்து அரசுப் பேருந்தில் பயணித்தவரா, நீங்கள்? வெளியானது அதிர்ஷ்டசாலிகளின் பட்டியல் ! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் முன்பதிவை அடிப்படையாகக் கொண்டு குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுத்தொகைகளை அறிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.

அங்குசம் இதழ்..

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் ஜனவரி-2024 முதல் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இத்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில், ஜுன்-2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- மும், இதர பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை நடைமுறைபடுத்தும் வகையில், ஆகஸ்ட்-2024 மாதத்திற்கான பதிமூன்று (13) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். குலுக்கலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் (மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அறிவித்திருக்கிறார்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.