மெகா பட்ஜெட்டில் வருகிறது ‘மார்டின்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மெகா பட்ஜெட்டில் வருகிறது ‘மார்டின்’

வாசவி எண்டெர்பிரைசஸ் பேனரில் உதய் கே. மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக் ஷன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் ஏ.பி. அர்ஜுன் இயக்கத்தில்,  துருவா சர்ஜா ஹீரோவாக நடிக்கும் பிரமாண்டமான பான் இந்திய படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி 13 மொழிகளில் திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, புரமோஷன் வேலைகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் செப்டம்பர் 01 ஆம் தேதி மீடியாக்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கே. மேத்தா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Martin (2024) Movie
Martin (2024) Movie

முதலில் தயாரிப்பாளர் உதய் கே. மேத்தா பேசினார். “முதன் முறையாக பாடல் மற்றும் டீசரை உங்களுக்குத் திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜுன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக  மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்”

அடுத்து… அர்ஜுன் சர்ஜா பேசும் போது… “என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல். ஒன்று துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய  ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Martin (2024) Movie
Martin (2024) Movie

உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ. 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.  நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள்.உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள். துருவாவிற்கு இந்தப்படம் பெரிய  பிளாக்பஸ்டராக இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

சரிகம நிறுவனம் ஆனந்த் பேசியதாவது.. “உலகம் முழுக்க ரசிக்கும்படியான படம் இது. எல்லோருக்கும் பிடிக்கும். கண்டிப்பாக எல்லா மொழிகளிலும் ஹிட்டடிக்கும், பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கிய உதய் மேத்தா சாருக்கு நன்றி. துருவா இப்படத்தை பிரபலப்படுத்த முழுமையாகக் களமிறங்கியுள்ளார். அசத்தலாக கதை எழுதியுள்ளார் அர்ஜுன்’.

ஹீரோயின் வைபவி “இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி”.

ஹீரோ துருவா சர்ஜா… “தமிழில் எனக்கு ரெண்டாவது படம். செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள். இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜுன் சாருக்கு மிகவும் நன்றி. இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் ” என்றார் உருக்கமுடன்.

Martin (2024) Movie
Martin (2024) Movie

இயக்கம்: ஏபி அர்ஜுன் , கதை: அர்ஜுன் சார்ஜா. நடிகர்- நடிகைகள்: துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் . டெக்னீஷியன்கள்:
இசை: மணி சர்மா ,
பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே எம் பிரகாஷ் .
தயாரிப்பு வடிவமைப்பு: மோகன் பி. கேரே தயாரிப்புத் தலைவர்: சிவர்ஜுன்
ஸ்டண்ட்: டாக்டர் கே ரவிவர்மா, ராம் லக்ஷ்மண், கணேஷ்,
இணை இயக்குனர்கள் : எஸ் சுவாமி, என் எஸ் வெங்கடேஷ், அபிஜித்.
ஆன்லைன் எடிட்டர்: பிரவீன் கே கவுடா தயாரிப்பு நிர்வாகி: தர்ஷன் சோம்சேகர் காசாளர்: ரமேஷ்
உதவி மேலாளர்கள்: மனோஜ், ராகேஷ், கார்த்திக், கிருஷ்ணா .
ஆடை வடிவமைப்பாளர்: பவித்ரா ரெட்டி, சேத்தன்
பி.ஆர்.ஓ குழு: சுதீந்திர வெங்கடேஷ் (கன்னடம்), கம்யூனிக் பிலிம்ஸ் (ஹிந்தி), வம்சி காக்கா (தெலுங்கு), ‘எய்ம்’சதீஷ் (தமிழ்), லெனிகோ சொல்யூஷன்ஸ் (மலையாளம்) இரண்டாவது யூனிட் கேமராமேன்: சங்கேத் மைஸ். போஸ்ட் புரொடக்ஷன் ஹெட்: மகேஷ் எஸ் ரெட்டி, டீசர் எடிட்: பிரவீன் கே கவுடா

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.