அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘பரிமளா & கோ’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு: ஜிகேஎம் தமிழ் குமரன்& பாண்டிராஜ். டைரக்டர்: பாண்டிராஜ். ஆர்டிஸ்ட்: ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், சந்தோஷ் சோபன், சாண்டி, மிஷ்கின், யோகி பாபு, பக்ஸ், பூர்ணிமா ரவி சிங்கம்புலி & ஜிகேஎம்.தமிழ்குமரன். ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை: ஃபாக்ஸென், எடிட்டிங்: பிரதீப் ராகவ், பிஆர்ஓ: சதீஷ் (எய்ம்)

நடுத்தர குடும்பத்தின் தலைவர் பரிமளா [ ஜெயராம்]. இவரின் மனைவி சுதந்திரம் [ ஊர்வசி]. இவர்களின் மகள்கள் பராசக்தி[ சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி], மதுமிதா [ அனந்திகா சனில்குமார்]. இதில் மதுமிதாவை அந்த ஏரியாவின் பெரிய ரவுடி, டிரக் மாஃபியாவான வர்கீஸ் [ சாண்டி] காதலிக்க கம்பல் பண்ணுகிறான். மதுமிதா மறுக்கிறாள். இதனால் பரிமளாவையும் சுதந்திரத்தையும் மிரட்டுகிறான் வர்கீஸ். இதனால் வர்கீஸை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்கள் பரிமளாவும் அவரது குடும்பத்தினரும். இந்த நிலையில் தீபாவளியன்று காலை கடற்கரையில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான் வர்கீஸ். இந்த கொலைக் கேஸை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் எம்பெருமான் [ மிஷ்கின்]. சப்போர்ட்டாக இருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் ஜிகேஎம். தமிழ்குமரன்.  வர்கீஸை கொலை செய்தது யார்? என பரிமளா ஃபேமிலிக்குள்ளேயே ஒருவர் மீது சந்தேகப்படுகிறார்கள். உண்மைக் கொலையாளி யார்? என்பதற்கு பலப்பல கிளைக்கதைகளை வைத்து ஒண்ணே முக்கால் மணி நேரம் கிறுகிறுக்க வைத்து தியேட்டரைவிட்டு வெளியே அனுப்புகிறார் டைரக்டர் பாண்டிராஜ்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Parimala & Co.பரிமளாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், சஞ்சனாவுக்கு ஒரு லவ்வர்[ சந்தோஷ் போபன்], அவருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், வர்கீஸின் அம்மாவுக்கு கள்ளக்காதல் ஃப்ளாஷ்பேக், வர்கீஸுக்கு பூர்ணிமா ரவியுடன் காதல் ஃப்ளாஷ்பேக், வர்கீஸை மதுமிதா லைட்டாக லவ் பண்ணும் ஆசையில் இருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக், சுதந்திரத்தின் தம்பி பக்ஸ், பரிமளாவின் தம்பி சிங்கம்புலி இவர்களின் எண்ட்ரிக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், க்ளைமாக்ஸ்ல இன்ஸ்பெக்டர் எம்பெருமானுக்கு ஒரு திகில் ஃப்ளாஷ்பேக். இப்படி ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக்கா வச்சு, சீட்ல உட்கார வச்சு ஆணி அடிச்சிட்டாரு டைரக்டர் பாண்டிராஜ். அதனால தான்  இடைவேளை விடும்வரைக்கும் ஆடியன்ஸிடமிருந்து எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லாமல் பிரம்மை பிடிச்சது போல சீட்ல உட்கார்ந்திருந்தார்கள்.

இதை காமெடி ஜானரில் கொண்டு போறதா? டிரக் மாஃபியாவை வேட்டையாடும் ஜானரில் கொண்டு போறதா? க்ரைம்-த்ரில்லர் ஜானரில் கொண்டு போறதான்னு க்ளைமாக்ஸ் வரை திக்குத் தெரியாமல் திரைக்கதையைக் கொண்டு போய் நம்மையெல்லாம் ‘பரிதாபம் & கோ’வாக்கிவிட்டார் டைரக்டர் பாண்டிராஜ்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

ரொம்பவே தள்ளாடும் திரைக்கதையை  ஜெயராமும் ஊர்வசியும் தான் கொஞ்சம் இழுத்துப் பிடித்து [ அதுவும் சில சீன்களில் மட்டும் தான்] நிறுத்த பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸுக்கு பதினைந்து நிமிடங்கள் முன்பு, ஜெயராம் வீட்டில் அவரர்து   குடும்பத்தை உட்கார வைத்து  மிஷ்கினும் தமிழ்குமரனும்   விசாரிக்கும் அந்த பத்து நிமிட சீனில் தான் தியேட்டரில் சிரிப்புச் சத்தம் கேட்டது. மிஷ்கினிடம் தலைவலித் தைலம் தேய்க்க ரெகமண்டேஷன் பண்ணும் ஊர்வசியின் மாடுலேஷன் செம சூப்பர். ஆனால் மற்ற சீன்களில் ரொம்பவே பரிதாபமாகத் தெரிகிறார் சீனியர் நடிகை ஊர்வசி.

HARINI JEWELLERS TRICHY

Parimala & Co.சஞ்சனா, அனந்திகா. இவர்களில் அனந்திகா தான் பல சீன்களில் ஸ்கோர் பண்ணுகிறார். ஆனால் குடும்பத்தை உட்கார வச்சு ஜெயராம் விசாரிக்கும் சீனில் சாண்டியைப் பத்தி அனந்திகா சொல்லிக் கொண்டே போவது மகா எரிச்சல். இதைவிட மகா எரிச்சல் வர்கீஸாக வரும் சாண்டி தான். இந்த எரிச்சல் பத்தாதுன்னு பூர்ணிமா ரவியுடன் ஒரு சாங் வேற.

இன்ஸ்பெக்டர் மிஷ்கின் சர்சர்ருன்னு ஜீப்பில் வர்றார். விரைப்பாக விசாரிக்கிறார், போகிறார். இன்ஸ்பெக்டர் கெட்டப் நல்லாயிருந்தாலும் கேரக்டர் சொதப்பிருச்சே ராசா. தமிழ்குமரனுக்கு  சப்-இன்ஸ்பெக்டர் கெட்டப் நல்லாவே மேட்ச் ஆகிருக்கு. பெர்ஃபாமென்ஸிலும் ஓகே. இந்தப் படம் ஓடி தமிழ்குமரனுக்கு லாபல் வருதோ இல்லையோ, இனிமே தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் சான்ஸ் கண்டினியூவா வரும்.

‘பரிமளா & கோ’ பரிதாபம் & கோ.

அங்குசம் பார்வையில் ‘பரிமளா & கோ’  32/100

 

—  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.