அங்குசம் சேனலில் இணைய

காவிரி கொள்ளிடம் கரையோரம் வசிப்பவரா நீங்கள் ? கலெக்டர் விடுத்த முக்கியமான அறிவிப்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், எந்நேரமும் உபரி நீர் திறந்துவிடும் அபாயம் இருப்பதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் ஐ.ஏ.எஸ்.

காவிரி கொள்ளிடம்
காவிரி கொள்ளிடம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ”காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொருத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாவட்ட ஆட்சியர்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும், பருவமழை காலம் என்பதனாலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவில் இருப்பதனாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தினை பொருத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும் என்பதனாலும் பருவமழை காலம் முடிவடையும் வரை காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மேலும் சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 

 -அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.