அர்ஜுன்தாஸ் சரிப்பட்டு வந்தாரா? -’பாம்’ பட டைரக்டர் சொன்ன தகவல்!
‘ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ்’ பேனரில் சுதா சுகுமார் & சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்து செப்டம்பர் 12-ஆம் தேதி வெளிவரவுள்ள படம் ‘பாம்’. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை டைரக்ட் பண்ணிய விஷால் வெங்கட்டின் இந்த ‘பாம்’-ல் அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளிவெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன், டி.எஸ்.கே. உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை-திரைக்கதை : மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட், ஒளிப்பதிவு : பி.எம்.ராஜ்குமார், இசை : டி. இமான், எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, நிர்வாகத் தயாரிப்பாளர் : டி.சரவணக்குமார், பி.ஆர்.ஓ : சதீஷ் [எய்ம்] தியேட்டர் ரிலீஸ் : சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன்.
12-ஆம் தேதி படம் ரிலீசாவதையொட்டி, டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி, ஆகஸ்ட்.29—ஆம் தேதி சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் ரா.பார்த்திபன், ஸ்ரீகணேஷ், சிபிச்சக்கரவர்த்தி, சண்முகப்ரியன், கார்த்திகேயன் மணி, நடிகர் மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர்.
தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வரவேற்றுப் பேசிய சம்விதா பாலகிருஷ்ணன், ஷரைலி பாலகிருஷ்ணன், “இந்தப் படம் அனைவருக்குமானது. அன்பு தான் நம்மை ஒன்றிணைக்கிறது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது. அதைத் தாண்டி இன்னொரு விசயமும் இந்தப் படத்தில் உள்ளது”
சக்திவேலன்,
“ முண்டாசுப்பட்டி, மண்டேலா போல இப்படம் இருக்கும். இதுவரை ரஃப்பாகவே நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், இதில் ரொம்ப சாஃப்டாக நடித்துள்ளார்”.
ரா.பார்த்திபன்,
“இந்தமாதிரி கதையையும் டைட்டிலையும் செலக்ட் பண்ணிய டைரக்டர் பெரிய குசும்புக்காரர் தான். இவரைவிட தயாரிப்பாளர் பெரிய குசும்புக்காரராக இருப்பார் போல”
காளிவெங்கட்,
“ டைரக்டர் என்னிடம் கதையை சொல்லிவிட்டு, நான் நடிப்பேனா என்ற சந்தேகமும் வந்தது அவருக்கு. பிணமாக நடித்திருக்கும் என்னை அர்ஜுன் தாஸ் தான் தூக்கிச்சுமந்துள்ளார். இது நல்ல படம். ஆதரவு தாங்க”
டி.இமான்,
“இந்தக் கதை முள் மேல் நடப்பது மாதிரி. அதை கவனமாக எடுத்துள்ளார் டைரக்டர். நம் மண்ணின் கதை சொல்லும் படம்”.
சிறப்பு விருந்தினர்களாக வந்த மற்ற இயக்குனர்களும் நடிகர் மணிகண்டனும் வாழ்த்திப் பேசினார்கள்.
டைரக்டர் விஷால் வெங்கட்,
“என்னை நம்பி இதில் மிகச்சரியாக, வித்தியாசமாக நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். காளிவெங்கட் மேல் தான் சின்ன டவுட் இருந்துச்சு. ஆனால் நடிப்பில் அசத்திவிட்டார். பிணமாக நடிக்கணும், மூச்சுவிடக்கூடாதுன்னா சும்மாவா? அதே போல் நாசர், அபிராமி போன்ற சீனியர்களை டைரக்ட் பண்ணியது மிகவும் பெருமிதம்”.
ஹீரோ அர்ஜுன் தாஸ்,
“இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. டைரக்டர் விஷாலும் அவரது டீமும் தான். விஷால் கதை சொன்னதுமே, நான் தான் பண்ணனுமா? சரிப்பட்டுவருவேனா?ன்னு கேட்டேன். ஆனால் என்னை நம்பி இந்தக் கேரக்டரைத் தந்தார். இப்படத்துக்கு மீடியா நண்பர்கள் பேராதரவு தரவேண்டும்”.
— மதுரை மாறன்