மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடைபெறுகிறது. முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரிவு வாரியாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது
அதில் மதுரை மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கான 50 போட்டிகள், 6 மையங்களில் நடைபெறுகிறதுஇதில் 38 மாவட்டத்தைச் சேர்ந்த 4400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பேருந்து, தங்கும் வசதி, உணவு பட மூன்று நாட்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுமதுரை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரடி கண்காணிப்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர் மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி என்கிற பட்டத்துடன் சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்வு ஜனவரி மாதம் சென்னையில் முதல்வர் தலைமையில் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்