அங்குசம் சேனலில் இணைய

என் வாழ்நாளில் என் கண்ணெதிரே இந்த நெட்டிச் சிற்பக் கலை, பெரும் அழிவினை நோக்கிச் செல்கிறதே..! !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நிலைக்குமா நெட்டிச் சிற்பக் கலை…??? புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கலைகளில் ஒன்று தான், “தஞ்சாவூர் நெட்டிச் சிற்பக் கலை.” இது “தஞ்சாவூர் ஓவியங்கள்”, “தஞ்சாவூர் கலைத் தட்டுகள்”, “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்” போன்று பாரம்பரியம் மிக்கதாகும்.

வீடியோ லிங் 

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்தத் “தஞ்சாவூர் நெட்டிச் சிற்பங்கள்” என்பன  அதன் அழகிலும் அவைகளின் வசீகரத்திலும் தனித்துவம் மிக்கதாகும். இன்றைக்கு அதனை விரும்பி விலை கொடுத்து வாங்குவோர் மற்றும் அதனைப் போற்றுவோர் குறைந்து வர, தற்போது கடுமையான நெருக்கடியில் “நிலைக்குமா நெட்டிச் சிற்பக் கலை” என்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Art of carving
Art of carving

இராஜராஜ சோழ மன்னன் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்த கை வேலைப்பாடு கலைகளில், நெட்டிச் சிற்பக் கலைக்கு எனத் தனித்த சிறப்பிடம் இருந்து வந்துள்ளது.

இராஜராஜ சோழனின் அரண்மனை அரங்குகளிலும், அரசனின் தர்பார் மண்டபத்திலும் நெட்டிச் சிற்பக் கலை வேலைப்பாடுகள் இடம் பிடித்திருந்தன. அத்தகைய நெட்டிச் சிற்பக் கலை, இன்றைக்குக் கரைந்து காணாமல் போகின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன் மிச்சமிருக்கும் எஞ்சிய கலைஞர்களில் ஒருவர் தான், கும்பகோணத்தில் வசித்து வரும் கே.ஏ. சொக்கலிங்கம். அவருக்கு வயது எண்பது. அவரது பத்துப் பனிரெண்டு வயதுகளிலேயே கும்பகோணத்தில் நெட்டிச் சிற்பக் கலை கற்றுக் கொள்ள வந்து விட்டவர்.

நெட்டிச் சிற்பக் கலை
நெட்டிச் சிற்பக் கலை

எழுபது ஆண்டுகளாக இந்தச் சிற்பக் கலையினை எதன் பொருட்டும் கை விட்டு விடாது தொட்டுத் தொடரும் பந்தமாக வாழ்ந்து வருபவர். அவரது “பிரகாசம் நெட்டிச் சிற்பக் கலைக்கூடம்” ஆனது  கும்பகோணம் மகாமகக் குளத்தருகே போஸ்ட் ஆபீஸ் சாலையில் ஒரு சந்தில் அமைந்துள்ளது.

“நெட்டின்னா என்னங்க?”

“ஏரி குளங்களில் வளருகின்ற நீர்த் தாவரம் நெட்டி. அது தண்ணீரை உறிஞ்சாது. அதன் தண்டுகள் தண்ணீரிலே  மிதக்கும் அளவுக்கு மிகவும் லேசானது. நெட்டித் தண்டுகளை ஒரு லாரி முழுவதுமாக லோடு ஏற்றினாலும், அவைகளின் மொத்த எடையானது சுமார் ஐநூறு கிலோவுக்கு மேலே தாண்டாது. அவ்வளவு எடை குறைவானவைகள் நெட்டித் தண்டுகள்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

நெட்டிச் சிற்பக் கலை
நெட்டிச் சிற்பக் கலை

அந்தத் தண்டுகளை வெயிலில் உலர வைத்து, அதன் மேல் பட்டைகளச் சீவி விட்டால் அதனுள்ளே நெட்டி எனப்படும் வெண்ணிறத் தண்டுகள் நமக்குக் கிடைக்கும். அந்த நெட்டித் தண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அவைகளை ஒரு வடிவமாக ஒட்ட வைத்துத் தான் நெட்டிக் கலைச் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.”

“என்னென்ன சிற்பங்கள் உருவாக்குவீர்கள்?”

“எந்தவொரு கோயில் மாடல், நினைவுச் சின்ன மாடல் எது  ஆர்டர் தந்தாலும் அதனை நெட்டிச் சிற்பமாக உருவாக்கித் தந்து விடுவோம். தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் மகாமகக் குளம், திருவாரூர் ஆழித் தேர் என இன்னும் நிறைய வடிவங்களை நெட்டிச் சிற்பங்களாக உருவாக்கித் தந்துள்ளோம். கும்பகோணம் மகாமகக் குளம் ஐந்து இஞ்ச நீளம் நான்கு இஞ்ச அகலம் என மிக மிகச் சிறிய வடிவத்திலும், ஐந்து அடி நீளம் நான்கு அடி அகலம் என மிகப் பெரிய வடிவத்திலும் நெட்டிக் கலைச் சிற்பமாக உருவாக்கித் தந்துள்ளோம்.”

“என்னென்ன விருதுகள் பெற்றுள்ளீர்கள்?”

“தமிழக அரசு 1980ல் சிறந்த கைவினைக் கலைஞர் விருது கொடுத்து கௌரவித்துள்ளது.   மத்திய அரசு 2013ல் சிறந்த கைவினைக் கலைஞர் பட்டயம் தந்து பாராட்டியுள்ளது.   தமிழக அரசு 2019ல் “வாழும் கலைப் பொக்கிஷம்” என்கிற விருது கொடுத்து மகிழ்வித்துள்ளது. நான் என்ன விருதுகள் பெற்று என்ன பயன்? என் வாழ்நாளில் என் கண்ணெதிரே இந்த நெட்டிச் சிற்பக் கலை, பெரும் அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.”

வீடியோ லிங்

“அப்படியென்ன அழிவினை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது இந்த நெட்டிச் சிற்பக் கலை?”

“கற்றுக் கொள்ள வந்ததிலிருந்து நான் எழுபது ஆண்டுகளாக இந்தத் தொழிலில் தான் தொடர்ந்து இருந்து வருகிறேன். ஏனோ தெரியவில்லை தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போல இல்லாமல், வாடிக்கையாளர்கள் மத்தியில் நெட்டிச் சிற்பங்களுக்கான சந்தை விற்பனையும் அதன் மீதானக் கலையார்வமும் பெரும் அளவில் குறைந்து போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்தில் எனது கலைக் கூடத்தில் என்னிடத்தில் மட்டும் இருபது முப்பது நபர்கள் பணியாற்றி வந்துள்ளனர். காலப்போக்கில் நெட்டிக் கலைச் சிற்பங்கள் விற்பனை பெரும் சரிவினைச் சந்திக்கவே நாளடைவில் இன்றையச் சூழலில் எனது கலைக் கூடத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே என்னுடன் வேலை செய்து வருகின்றனர்.

மத்திய அரசு, மாநில அரசான தமிழக அரசு என இரண்டு அரசுகளும் நெட்டிச் சிற்பக் கலை மீதாகக் கவனம் செலுத்தி  மனது வைத்து, உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நெட்டிச் சிற்பக் கலையினை மீட்டெடுக்க முடியும். அதனை நிலை பெறச் செய்ய முடியும்.” என்கிறார் மிகுந்த அனுபவம் நிறைந்த நெட்டிச் சிற்பக் கலைஞரான கும்பகோணம் கே.ஏ. சொக்கலிங்கம்.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.