மன்னிப்புக் கேட்ட விஷ்ணு விஷால்! – ஏன்? என்னாச்சு?
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஷுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன் கே. இயக்கத்தில், விஷ்ணு விஷால் , இயக்குநர் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானஸா செளத்ரி நடிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது ‘ஆரியன்’.
விமர்சகர்கள் பாராட்டாலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பாலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ந்த விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் அக்டோபர் 04- ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் பேசியவர்கள்…
எடிட்டர் சான் லோகேஷ்
“ஆரியன் படத்திற்கு தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் ஜிப்ரான்
“ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆரியன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். அனைவரும் இந்த புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவின் அர்ப்பணிப்பு பிரமிப் பானது. எப்போது கூப்பிட் டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி”

நடிகை மானஸா சௌத்திரி
“மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. படத்தில் அனிதா கேரக்டர் என் திரை வாழ்க்கை யில் மிக முக்கியமான ரோல். இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி”
ஷ்ரத்தா ஶ்ரீநாத்
“இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த அளவு பாராட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும், நாங்கள் நினைத்த படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமை யாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆரியன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணு விற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி”.
இயக்குநர் பிரவீன்
“இப்படத் தைத் தியேட்டர்களில் பார்த்த மக்களும் இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. இந்த வாய்ப்புகொடுத்த விஷ்ணு விற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”
நடிகர் & இயக்குநர் செல்வ ராகவன்
“நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய்ச் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து, இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள் அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீனின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி”

நடிகர்& தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்
“ஆரியன் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். ஏன்னா என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டான். அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தை தந்துள்ளார்.
இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது. என்ன க்ளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள். அது தான் பிரவீன் வைத்திருந்த க்ளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும்.
தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓப்பனிங் இந்தப் படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ் சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார். இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார்.
மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம். செல்வா சார் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பைத் தந்துள்ளார்.
இயக்குநர் பிரவீனை இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாக செய்ய வாழ்த்துகிறேன் . கட்டாகுஸ்தி-2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் , இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி”.
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு – ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ‘விஷ்ணு விஷால்,
எழுத்து இயக்கம் – பிரவீன் கே.
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
— ஜெடிஆர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.