அடேங்கப்பா… அஸ்வின்ஸ்!
பிரபல அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் நிறுவனரின் இளைய புதல்வர் அஸ்வின்- Dr.ஹம்ருதாவின் திருமணம் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரி வனப்பான அரங்கில் ப்ருமாண்டதிற்கும் ப்ருமாண்டம்!
அரசியல் அல்லது ஆன்மீக மாநாடு கணக்காய் அங்கு ஜனத்திரள்! சுத்துப்பக்கம் 18௦ பட்டி மக்களும் அங்கே ஐக்கியம் எனலாம். இந்திய தேசிய ஒருமைப்பாடு போல அனைத்து மாநில உணவு வகைகளும் அங்கே வரிசைக்கட்டி மிரட்டின.
எதை எடுப்பது – எதை விடுப்பது என்று விருந்தினர்களுக்கு திண்டாட்டம். சமீபத்தில் இப்படி ஒரு அமர்க்கள கல்யாணத்தை பார்க்கவில்லை.
திருமணம் மட்டுமில்லை-அஸ்வின்சின் வேறு சில அடேங்கப்பா விஷயங்களும் கீழே!
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷலில் அப்படி என்ன விஷேசம்?
உணவின் தரத்தை உறுதிப்படுத்துதல் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துதல், ஒரு முறை உபயோகித்த எண்ணையை மறுமுறை உபயோகிபதில்லை —
சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவு தயாரித்தல் என்பதை தாரக மந்திரமாய் மனதில் நிறுத்தி செயல்பட்டு வரும் அஸ்வின்ஸ் நிறுவனம் (பெஸ்ட் ஃபுட் ஃபேக்டரி) விருது பெற்றுள்ளது.
சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடந்த ‘பினாக்கிள் 2024’ – விருது வழங்கும் விழாவில் அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், நிர்வாக இயக்குனர் செல்வகுமாரி ஆகியோரிடம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூரில் 2003ல் சிறு தொழிலாக அஸ்வின் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் தொடங்கப் பட்டது. பிறகு திருச்சி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சென்னை, சேலம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, தர்மபுரி, முசிறி, கிருஷ்ணகிரி, லால்குடி, திண்டுக்கல் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 44 இடங்களில் கிளைகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
வெளிநாடுகளுக்கும் ஜரூராய் ஏற்றுமதி!
அஸ்வின்ஸ் மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்கம்:
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், அஸ்வின்ஸ் குழுமம் இணைந்து மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அஸ்வின்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பினை சீர்திருத்தம் செய்துள்ளனர்.
அங்கு ஆழ்துளை கிணறுகள் —பைப்லைன் அமைத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து–பராமரிக்கப்படும் வகையில் இந்த மியாவாக்கி காடுகள் அப்போதைய கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைக்க சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.
அடுத்த ஹைலைட்:
அஸ்வின்ஸ் நிறுவனம் மூலம் பெரம்பலூரில் இயங்கும் மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முதியோர் இல்லங்களுக்கும், மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏழை மாணவர்களின் கல்வி உதவிகள், மாற்றுத்திறனாளிகளை அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தி அவர்களது வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்கு துணைநிற்றல்; மகளிர் சக்திக்கு மதிப்பளிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அளிகிறார்கள்.
இதுபோன்ற பணிகளை அக்கறையுடன் செயல்படுத்தி வருவதற்காக நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமை படுத்தப்பட்டுள்ளது.
அடி மட்டத்திலிருந்து படிப்படியாய் வளர்ந்து – வளர்ந்துக்கொண்டே இருக்கிற இவர்களது சமூக அக்கறைக்கும்,தொண்டிற்கும் அளவே இல்லை சாமி!
என்.சி.மோகன்தாஸ்
பட கலவை: வெ.தயாளன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.