சவுதியில் விபத்தில் இறந்த திருச்சியை சேர்ந்த அசோகன் ! மனித நேயத்தோடு உடலை மீட்க உதவிய தமுமுக, மமக தொண்டர்கள் !
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டம் அசோகன் என்பவர் சவுதி அரேபியா டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன அசோகனின் உறவினர்களிடம் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களை தொடர்பு கொண்டு இறந்து போன அசோகனின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் அவர்கள் ரியாத் மண்டல சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்க தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா ஆகியோர் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து 13.12..2024 வெள்ளிக்கிழமை இரவு செளதி அரேபியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
14.12.2024 சனிக்கிழமை காலை 10மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்த அசோகனின் உடலை திருச்சி கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அசோகனின் உறவினர்கள் அசோகனின் உடலை பெற்று ஆம்புலன்சஸ் மூலம் அசோகனின் சொந்த ஊரான மகிழம்பாடியில் இருக்கக்கூடிய அவர்களுடைய இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.
அசோகனின் உடலை பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள் அசோகனின் உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த ஒப்பற்ற பணிக்கு வளைகுடா பொறுப்பாளர் மாநில பொருளாளர் சபியுல்லா கான் அவர்களும் IWF மண்டல இணைச்செயலாளர் ஷாகீர் பைக் சமூகநலத்துறை துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ உள்ளிட்டோர் உடன் இருந்து உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அன்னாரின் உடலை திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக,மமக திருச்சி(கி)மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் அறிவுறுத்தலின்படி மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரம்ஜான் அலி, விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம் லால்குடி சாந்தி நகர் கிளை தலைவர் ஆரிப், செளதி நிர்வாகி நஜிமுதீன், ஆகியோர் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து உடலை பெற்றுக் கொண்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.