தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் 2026 – அணி மாறும் கட்சிகளால் பரபரப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026 மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டன. திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறும் தங்களோடு கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்ற அரசியல் கட்சிகள் ஏமாந்து விட்டன. விசிகவை அதிமுகவில் இணைக்க அக் கட்சியின் மேல்மட்டத் தலைவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. தவெக தலைவர் விஜய் அவர்களுடன் அதிமுக சார்பில் பேசப்பட்ட கூட்டணியும் தோல்வியில்தான் முடிந்துள்ளது.

விஜய் அரசியல்
விஜய் அரசியல்

இனிய ரமலான் வாழ்த்துகள்

தற்போது தவெக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பாஜகவோடு சில சிறிய கட்சிகளும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த தேமுதிகவும் விலகிவிட்டது. நாம் தமிழர் எப்போதும்போல் தனித்தே போட்டி என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில்டி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என 5 முனைப்போட்டி நடைபெறுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் விலகிய தேமுதிக

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஒரு பெரிய கட்சியாக தேமுதிக இருந்தது. தேமுதிக போட்டியிட்ட விருதுநகரில் வெற்றியின் எல்லையைத் தொட்டு சுமார் 5000 வாக்குள் வித்தியாசத்தில் தேமுதிக வெற்றி வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில், தேமுதிகவுக்கு ஒரு இடம் தரப்படும் என்று தேர்தல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்து.

அதன் அடிப்படையில் மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிடும்என்று தேமுதிக தலைவர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறினார். இதற்குப் பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “தேமுதிகவுக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என்று 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. தேமுதிக தவறான தகவலைத் தெரிவித்துள்ளதுஎன்று கூறினார்.

இதனால் கோபம் அடைந்த பிரேமலதா கடந்த 18ஆம் நாள் தன்னுடைய பிறந்தநாளின்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை என் அடுத்த பிறந்தநாளின்போது தெரிவிக்கிறேன்என்று அணுக்குண்டைத் தூக்கிப்போட்டார். தொடர்ந்துதமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை பாராட்டதக்க வகையில் அமைந்துள்ளது. ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு இடங்கள் குறையும் என்று திமுக போராடி வருகின்றது.

திமுகவோடு தேமுதிகவும் இணைந்து போராடும்என்று அறிவித்து திமுகவோடு கூட்டணி அமைக்க பச்சைக்கொடி காட்டியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி வரும் தேமுதிகவைக் கூட்டணியில் திமுக சேர்த்துக்கொள்ளும். இதில் பிரச்சனைகள் இருக்காது. அதிமுகவைத் தேர்தல் களத்தில் பலவீனப்படுத்தும் எல்லா நடவடிக்கையிலும் திமுக ஈடுபடும். தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் திமுக தருமா? என்பது பெரிய கேள்விதான்என்றும் குறிப்பிட்டார்.

அதிமுகபாமகவோடு கூட்டணிக்குத் தயார்

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக விலகிய நிலையில், அதிமுக கூட்டணி அமைக்க இருக்கும் ஒரே கட்சியாக பாமக மட்டும்தான் உள்ளது. அதிமுகவும் பாமகவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையைத் திரைமறையில் நடத்தி வருவதாக பத்திரிக்கையாளர் பிரியன் கூறுகின்றார்.

அண்மையில் பாமக நிறுவனர் இராமதாசு தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,“அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் ஜூன் மாதத்தோடு முடிகின்றது. நீங்கள் சொல்வதுபோல் அன்புமணி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிடவே விரும்புகிறோம். அதற்காக திமுகவிடம் கையேந்தி நிற்கமாட்டோம்என்று கூறினார். பாஜகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் கேட்கமுடியாது. காரணம் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லை.

அதிமுகவிடம் மட்டும்தான் 2 உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஒரு உறுப்பினரை பாமகவிடம் அதிமுக கொடுத்துவிடும். இதனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி உறுதிபடும் என்று அதிமுக தலைவர்கள் கூறிவருகின்றனர். அதிமுக + பாமக கூட்டணி அமைந்தால் வட மாவட்டங்கள், சேலம், தர்மபுரி போன்ற மேற்கு மாவட்டங்களில் அதிமுக கணிசமாக இடங்களிலும், பாமகவும் கணிசமாக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பாமகவோடு அதிமுகவுக்குக் கூட்டணி இல்லையென்றால் ஏறத்தாழ அதிமுக தனித்தே போட்டியிடும் வாய்ப்பு ஏற்படும். அதிமுக சொற்ப இடங்களை மட்டுமே பெறமுடியும். இப்படிப்பட்ட ஒரு தோல்வியை அதிமுக தவிர்க்கவே பாமகவோடு கூட்டணி அமைக்க அதிமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

மு. க. ஸ்டாலின் (M. K. Stalin)
மு. க. ஸ்டாலின் (M. K. Stalin)

சட்டப்பேரவை தேர்தல் களத்தில் நாளுக்குநாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. எந்த அணியில் மாற்றங்கள் ஏற்படும் என்பது மிகவிரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில் திமுக மட்டுமே கூட்டணியைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது. மிகஅண்மையில் சட்டப்பேரவையில் தவாக உறுப்பினர் வேல்முருகன் நடந்துகொண்ட முறையை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு..ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சட்டப்பேரவைத் தலைவரும் இனி வருங்காலங்களில் வேல்முருகன் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று மன்னிப்பு வழங்கியுள்ளார். இதையொட்டி வேல்முருகன் எதிர்காலத்தில் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யாரோடு கூட்டணி என்ற இறுதி நிலவரம் 2026 ஜனவரியில் தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.

 

—    ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.