சுலபத்தவணை சுழலில் சிக்கி சின்னா பின்னமானவர்களின் கதை தான் ‘EMI’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி  ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இ.எம்.ஐ.(EMI) மாதத் தவணை’. இந்த சுலபத்தவணை என்ற பேராபத்து சுழலில் சிக்கி சின்னா பின்னமானவர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.  அவர்களின் கதை தான் இந்தப்படம்.

ஏப்ரல் மாதம்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 21- ஆம் தேதி இரவு நடந்தது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இந்நிகழ்வினில் பேசியோர்…

தயாரிப்பாளர் மல்லையன்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

“எங்கள் பட விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரை ஆளுமைகள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. EMI  எடுத்து எத்தனையோ பேர் மனநிம்மதி இல்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அவர்களின் கதையை இந்த EMI படம் சொல்கிறது. EMI  எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது. அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

” அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு இ.எம்.ஐ.யில்எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம்.இப்போது சரியானவர்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை, நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதையே நிறுத்தி விட்டார்கள்.  இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது.  ஹெல்தியான சினிமா இல்லை. இந்த நிலைமையை மாற்ற இம்மாதிரி EMI  படத்தை ஆதரிக்க வேண்டும். இப்போது சின்ன படங்கள் தான் ஓடுகிறது. அது போல இந்தப்படமும் வெற்றி பெறட்டும்”.

 ஹீரோயின் சாய் தன்யா

” EMI  யோட கொடுமைகளை இந்தப்படத்தில் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். உங்களுக்கு விழிப்புணர்வு தரும் படமாக இப்படம் இருக்கும். EMI  ஆல் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் நண்பர்களை, இந்தப்படத்திற்கு அழைத்துச் சென்று காட்டுங்கள்”.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் “படத்தின் டிசைன் முதல், எல்லாமே மிகத்திட்டமிடலுடன் உருவாக்கியிருக்கிறார்கள். EMI  வாங்காத ஆளே இருக்க முடியாது, எல்லோருக்கும் மிக எளிதாக கனக்ட் ஆகும் படம். இந்தப்படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்குமென நம்புகிறேன்”.

இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சை

“பத்து வருடங்களுக்கு முன் இயக்குநரும் நானும் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம், அதை ஞாபகம் வைத்து, என்னை அழைத்து இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.

இயக்குநர் வெங்கடேஷ் 

“படம் நன்றாக இருந்தால் பத்திரிகையாளர்களே கொண்டு சேர்த்து விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்டால் படம் ஹிட். சதாசிவம் முதல் படத்தில் நல்ல கண்டெண்டு டன் படம் தந்துள்ளார். இந்தப்படத்திற்கு முழு ஆதரவு தாருங்கள். புதுமுகங்களை நம்பி தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்”.

தயாரிப்பாளர்& நடிகர் பிஎல் தேனப்பன்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

“என்னை இயக்குநர் சதாசிவம் அழைத்திருந்தார். சின்னப்படங்களுக்கு அழைத்தால் எப்போதும் நான் வந்துவிடுவேன். நல்ல தயாரிப்பாளர்கள் படம் எடுக்கத் தயாரிக்க வருவதில்லை என்கிறார்கள். ஆனால் நடிகர்களும் அவர்கள் குடும்பமும்  தயாரிக்க ஆரம்பித்த பிறகு  நாங்கள் என்ன தான் செய்வது? நல்ல கதைகள் வந்தால் நாங்கள் தயாரிக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் இப்போது நல்ல கதைகள் வருவதில்லை. இந்தப்படம் நல்ல கதையுடன் வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்”.

இயக்குநர் அரவிந்த்ராஜ்

“EMI  எல்லோர் வாழ்விலும் கனக்ட் ஆகக் கூடியது. இப்படத்தில் நிறைய நல்ல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. இயக்குநர் படத்தை அழகாக எடுத்துள்ளார். மக்கள் நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருகிறார்கள். நல்ல படம் எடுத்துள்ளீர்கள் அதைச் சரியாக விளம்பரப் படுத்துங்கள். படம் வெற்றி பெறட்டும் “.

நடிகை தேவயானி

“இந்த டைட்டிலே எனக்குப் பிடித்திருந்தது. EMI வாங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லதாக இருக்கும், இல்லையெனில் அது பிரச்சனையாகி விடும். அதை இந்தப்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும்  படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் பேரரசு

“என் அழைப்பை ஏற்று வந்த ஆளுமைகளுக்கு என் நன்றி. என் உதவி இயக்குநர் இயக்கியுள்ள படம் இது.  இ.எம்.ஐ.யில் வாங்குபவர்கள், முதல் மூணு மாதம் கட்டுவார்கள். ஆனால் 4 வது மாதம் கட்ட மாட்டார்கள். வாங்கியவர் ஆஃபிஸ் போய்விடுவார். வசூலிக்க வருபவர்களிடம்  பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆம்பளைகள் வாங்கும் EMI ஆல் பாதிக்கப்படுவது பெண்கள் தான். EMI எல்லோரும் பொறுப்போடு பார்க்க வேண்டிய அருமையான படம்.  EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது”.

இயக்குநர் சதாசிவம் சின்னராஜ்

” என் வாழ்வில் நான் நேரிடையாக பார்த்த  ஒரு சம்பவம் தான் இந்தப் படம். எனது நண்பன் ஒருவன் இ.எம்.ஐ.யில் ஒரு  கார் எடுத்துவிட்டு டார்ச்சரை அனுபவித்தான். அதை நேரில் கண்டபோது தான் இது அனைவர் வாழ்விலும் நடக்கும், அதை எடுக்கலாம் என முடிவு செய்தேன்.  முதல் முதலில் கதையைப் பேரரசு சாரிடம் சொன்னேன். இப்போது வரை படத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து வருகிறார். முதலில் 4 பேர் சேர்ந்து  தயாரிப்பதாகத்தான் இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் மல்லையன்,  நீ ஏன் எல்லோருக்கும் பதில் செய்கிறாய், நானே தயாரிக்கிறேன் என்று, என்னை நம்பி இறங்கினார். அவருக்கு என் நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கான கருத்தை பேசியுள்ளோம். எல்லோர் வாழ்விலும் இதை அனுபவித்திருப்பார்கள் அதைத்தான் படமாக எடுத்துள்ளோம்.  சில ஹீரோக்கள் சின்ன பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ள வில்லை . அதனால் தான் நானே நடித்து விடலாம் என இறங்கி விட்டேன். இந்த நல்ல படத்துக்கு ஆதரவைத் தாருங்கள்”.

இயக்குநர் பாக்யராஜ்

“சில நேரம் பட டைட்டிலே புரியாது. ஆனால் இந்த டைட்டிலிலேயே எல்லாம் புரிந்து விடுகிறது. தயாரிப்பாளர் மல்லையன், இயக்குநரையே  தைரியமாக ஹீரோவாக்கியுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இசையமைப்பாளர் மிக அருமையாகப் பாடலை தந்துள்ளார், தொழில் நுட்பக் கலைஞர்கள் மிக நன்றாக வேலை பார்த்துள்ளனர். ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்துள்ள இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.  நானே முதல் படத்திற்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன். ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.  நம் வாழ்க்கையிலிருந்து கதையை எடுப்போம் என கதை செய்தேன். நம் வாழ்க்கையை எடுத்தால் படம் ஜெயிக்கும். EMI எல்லோரும் அனுபவிப்பது தான். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  காமெடி சென்ஸோடு படத்தைச் சொல்லியிருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள்.  படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படத்தில்  பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், ஓ.ஏ.கே. சுந்தர், லொள்ளுசபா மனோகர், செந்தி குமாரி, ஆகியோர் நடித்துள்ளனர்.

சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  பாடல்களை பேரரசு, விவேக்  எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரான்சிஸ்,   எடிட்டிங் : ஆர் .ராமர், நடனம் :தீனா, சுரேஷ் ஜீத்,

ஸ்டண்ட் : மிராக்கில் மைக்கேல். தயாரிப்பு மேற்பார்வை : தேக்கமலை பாலாஜி. பி.ஆர்.ஓ: புவன் செல்வராஜ்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.