தேசத்திற்கான மாபெரும் பின்னடைவு ”பாஜக” வின் வெற்றி – வி.சி.க திருமாவளவன் !
மதுரை விமான நிலையத்தில் வி.சி.க திருமாவளவன் பேட்டி….
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
ஆம் ஆத்மி பின்னடைவு ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் ஆனால் அது தேசத்திற்கான தேர்தல் பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். ஈகோ பிரச்சனைகளை பின்பக்கத்தில் வைத்து விட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
டெல்லி தேர்தல் முடிவுகளை படிப்பினையாக கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும்.

ஈரோடு எதிர்பார்த்த வெற்றியை திமுக பெரும் என்று நம்புகிறேன்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர்.
உங்களுக்கு எதிராக இந்து சமூகம் வட மாநிலத்தில் மதப் பிரச்சினையை கலக்கி பகுத்தறி கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுவார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத பாஜகவினர் இப்போது எதற்காக கொடுக்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம். இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவிக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பாஜக அல்லாத மாநிலங்களையும் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். திமுக அரசே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது இதனால் இந்தியா அரசு வஞ்சிக்கிறது.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.