ஏ.டி.எம். கொள்ளை ! மேவாட் திருடர்கள் – ஈகோவினால் கோட்டை விட்ட உளவுத்துறை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஹரியானா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மேவாட் திருடர்கள். இவர்கள் .டி.எம்.கொள்ளையில் எக்ஸ்பர்ட்ஸ். ஹரியானாவில் நூ மாவட்டம் மற்றும் ஆல்வார் மாவட்டம்  2 மாவட்டம் சேர்ந்தது மேவாட் ரீஜன் . இங்குள்ள சில கும்பல்கள் தான் .டி.எம். கொள்ளைகளில் எக்ஸ்பர்ஸ்ட். இவர்களுக்கு .டி.எம்.இயந்திரங்களில் உள்ள  ஸ்கேனர் கருவிகளை பயன்படுத்தி நாசூக்காக திருடுவதில் வல்லவர்கள்.

இவர்களது கைவரிசை தென் மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா போல நடக்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வருடத்திற்கு ஒரு மாதம் என வருட பிளான் போட்டு கச்சிதமாக கொள்ளை அடிப்பர். அதோடு ஒரு .டி.எம்.களில் கொள்ளை அடித்தால் அதே ஏடி .எம்.களில் மீண்டும் அதே பணத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்து விட்டு வெறும் கையோடு வெற்றிகரமாக செல்வர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

 வடக்கு மண்டல ஐஜி கண்ணன்
வடக்கு மண்டல ஐஜி கண்ணன் – தலைமையில்…டீம்

இதனால் போலீஸ் வாகன சோதனைகளில் கூட அவர்களை பிடிக்க முடியாது. இப்படியாப்பட்ட பலே கில்லாடிக் கும்பலை கடந்த ஆண்டு சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சவுத் ஜோன் அடிசனல் கமிசனர் கண்ணன் தலைமையிலான டீம் முதன் முறையாக ஹரியானாவில் போய் தூக்கி வந்தனர். இப்பொழுது அவர்கள் ஜாமினில் வெளியே வந்து சிட்டியை விட்டு விட்டு கோயில் நகரமான திருவண்ணாமலையில் கை வரிசை காட்டியுள்ளனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ஈகோவினால் – கோட்டை விட்ட உளவுத்துறை !

இந்த ஏடி.எம்.கொள்ளையர்கள் கடந்த டிசம்பர் மாதமே  தமிழகத்தில் கால் வைத்துள்ளதாக சிட்டி கிரைம் டீம் மாநில  உளவுத்துறை தலைமைக்கு நோட் நோட்டது. ஆனால் மாநில உளவுத்துறை தலைமை அதனை சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் .ஜி.க்களுக்கு ஈகோவில் சொல்லாமல் கோட்டை விட்டதால் இப்பொழுது .டி எம்.மை உடைத்து தீ வைத்து எரித்து கொள்ளையடித்து சாகவாசமாக தமிழக எல்லைகளை கடந்துள்ளனர். இன்னும்  ஓரிரு நாட்களில் கொள்ளையர்களை பிடித்து விடுவர் ஆனாலும் கொள்ளை நடந்தது நடந்தது  மாநில உளவுத்துறையின் தலைமையிலான ஈகோவினால். 

ATM
ATM

இப்போது எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஸ்டாலினை அறிக்கை, பொதுக்கூட்டங்களில் கிழித்தெடுப்பார் இதனால் அவமானம் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் என்பதை இன்னும் ஒரு முதல்வராக அவர் உணரவில்லை. ஒரு அதிகாரி மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்தால்  எப்படி கோட்டை விட்டார்கள், என்ன நடந்தது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் . என்னமோ இந்த அரசாங்கமே சில அதிகாரிகளை வைத்து இயங்குவது போல கட்டமைப்பது முதல்வருக்கு சறுக்கல் ஆகும் இதை முதல்வர் எப்போது உணர்வார் ?

– அஜித்குமார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.