மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி ! சாதித்த டாக்டர் சரவணன் – படங்கள் தொகுப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை அதிமுகவில் சாதித்த டாக்டர் சரவணன்………………

மதுரை வலையங்குளம் பகுதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த பிப் 4 ந்தேதி பெந்தகோஸ்தே திருச்சபையின் தேசிய மாநாடு கூட்டம் திடலில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறுநாள் 5ந்தேதி டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் அதிமுகவின் முன்னால் முதல்வர் எடப்பாடி தலைமையில் மாற்றுக் கட்சியினர் இணைகிறார்கள் என்று குறிப்பிட்டனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இரட்டை இலை சின்னம் பெறுவது சம்பந்தமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு எடப்பாடியின் அனுமதி பெற்று பிப்ரவரி 10 அன்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

டாக்டர் சரவணன் மதுரையில் இந்த இணைப்பு விழா எல்லோராலும் பேசப்பட வேண்டும் என்று எண்ணியது போல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மதிய உணவு , பிரியாணி, தண்ணீர் பாட்டில் ,கலர் பாட்டில், தோளில் தொங்குவதற்கு மப்ளர், இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகள், ஆண்களுக்கு அதிமுக பாடர் வேட்டி, இளைஞர்களுக்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் ,எடப்பாடி, சரவணன் ஆகியோர் படங்கள் போட்ட டீசர்ட், ரிங்ரோடு முழுவதும் இருபுறங்களிலும் கொடிகளை கட்டிஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெண்களுக்கு செய்த சாதனை பேனர்கள் வழிநெடுகிலும் வைக்கப்பட்டன.

எடப்பாடி வரும் பாதைகளில் பெண்களால் மலர் தூவப்பட்டது, திரைப்படத்துறையில் பவுன்ஸ்ர்களாக இருப்பவர்கள் 50 பேரை எடப்பாடி பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். நடிகர்கள் ஓய்வெடுக்கும் கேரவன்பஸ், ஆங்காங்கே வேன்களில்அதிமுக செய்த திட்டங்கள் களை திரையில் திரையிடப்பட்டன.

சேலத்தில் இருந்து மதுரை வரும் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் உதயகுமார் ,செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் தனித்தனியாக வரவேற்பு அளிப்பதாக முதல் நாள் அறிவித்துள்ளனர். அகமுடையார் பேரவை, மருது சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, சிவகாசி ஆகிய ஊர்களில்  எதிர்ப்புபோஸ்டர் ஒட்டி திருமங்கலம் டோல்கேட் அருகே எடப்பாடி காரை மறிப்பதாக தகவல் பரவ உடனடியாக சுதாரித்துக் கொண்ட உளவுத்துறையினர் போஸ்டர் ஒட்டியவர்களிடம் பேசியதும் மறியல் கைவிடப்பட்டது.

இந்தசெய்தி அறிந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள் தனித்தனியாக எடப்பாடிக்கு மதுரையில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ள அனைவரும் ஒன்றிணைந்து திருமங்கலம் டோல்கேட்டில் ஒன்று கூடி வரவேற்பு அளித்தனர். மதுரை கிளம்பிய எடப்பாடி பழனிச்சாமி கூத்தியார் குண்டு அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில்100 அடி கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவிட்டு டாக்டர் சரவணன் ஏற்பாடு செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் படைசூழஎடப்பாடி இணைப்பு விழா மேடைக்கு மாலை 5 மணிக்கு வந்தார்.

எடப்பாடியை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல 50 சினிமாவில் உள்ள பவுன்சர்கள் என பிரமாண்ட மாநாடு போல் காட்சியளித்தது…

வரவேற்ற பெண்கள் பூசணிக்காய் ஆரத்தி , பேண்டு வாத்தியம் என கூட்டத்தை காட்டிமிரட்டி விட்டார் டாக்டர் சரவணன் விழா மேடையில் நடந்துவந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைத்து மைக்கை பிடித்தார் எடப்பாடி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேடையில் அமர்ந்திருந்த டாக்டரை அருகில் நிக்கவைத்துஅதிமுகவின் சாதனையை பற்றியும் திமுகவின் வேதனை பற்றியும் பொரிந்து தள்ளினார்.

மதுரை மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இணைப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு நன்றி. அதிமுக எழைகளுக்கு உதவி செய்யும் கட்சி என்றும் திமுக குடும்பம் ஆட்சி செய்து வருகிறது கமிஷன், கரப்சன் திமுகவில் உள்ளது என கூறினார்.

திமுக அரசு 90 சதவீதம் அறிவிப்பை நிறைவேற்றியதாக பொய் பிரச்சாரம் கூறுகிறார்கள்.  திமுக வெளியிட்ட அறிவிப்பு 520 அதில்90 சதவீதம் இன்னும் செயல்படுத்த வில்லை திமுக அமைச்சர்கள் பொய் கூறுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஊழலை பற்றி பேசக் கூடாது என கூறுகின்றனர். திமுக ஊழளின் உற்றுக்கண் ஆக உள்ளது என‌ குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஊழல்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்றும் திமுகவில் ஆட்கள் இல்லை திமுகவில் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான். திமுகவிற்கு உழைத்தவர்கள் வயது முதிர்ந்து இருக்கின்றனர். திமுக நம்மை பற்றி பேச அருகதையில்லை. அதிமுக 33 ஆண்டுகளாம் ஆட்சி செய்தது. ஏழைகள் உயர்வு, கல்வி முன்னேற்றம் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

கடந்த 2011 திமுக ஆட்சியில் 100க்கு 32 பேர் உயர்கல்வி படித்த நிலையில் அதை 100க்கு 52 பேர் உயர்கல்வி படிக்கின்றனர். பல உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான், மதுரையில் பல திட்டங்களை திமுக முடக்கியுள்ளது. மதுரையில் வைகை ஆற்றில் இருபுறமும் சாலைகள் அமைப்பது முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் உருவாக்கி திட்டத்தில் சிலவற்றை தான் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி வருகிறார்.

மதுரை டாக்டர் சரவணன் - அதிமுக இணைப்பு விழா (13)
மதுரை டாக்டர் சரவணன் – அதிமுக இணைப்பு விழா (13)

டாக்டர் சரவணுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவு !

மேடையில் எடப்பாடி அருகே  அமர்ந்த சரவணனிடம் நீங்கள் கொரோனா நேரங்களில் பொதுமக்களுக்கு நன்றாக மருத்துவம் செய்து உள்ளீர்கள். இங்கு வேன்களில் அதிமுக திட்டங்களைபொதுமக்களுக்கு திரையிட்டுள்ளீர்கள் அதே போல் ஈரோடு இடைத்தேர்தலிலும் இதே வாகனத்தை வைத்து திரையிடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். மற்றும் ஈரோட்டில் உள்ள மருத்துவர் களை நமது தொண்டர்களுடன் நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் நடிகர்களை சென்னையில் வைத்து கட்சியில் இணைப்பதற்கு அனுமதியும் பெற்றுள்ளார். செலவு செய்த ஒரு கோடி ரூபாய் வீணாகவில்லை எனவும் மதுரையில் அதிமுக இணைப்பு விழாவை மிகப் பிரமாண்டமாக செய்து சாதனை படைத்து விட்டார் சரவணன் என மதுரை அதிமுக தொண்டர்களின் பரவலாக பேச்சு கேட்க முடிந்தது…

மிஸ்ஸான எக்ஸ்லேட்டர்

எடப்பாடிபழனிச்சாமி நடந்து வரும் மேடையை எக்ஸ்லேட்டர் நகரும் படிக்கட்டுகளாக பிரமாண்டமாக அமைக்க திட்டமிட்டு இருந்தனர் டாக்டர் சரவணன , நிகழ்ச்சி ரத்து , தேதி மாற்றம், கடைசி நேர ஏற்பாடு என நெருக்கடி அதிமானதால் எக்ஸ்லேட்டர் தயார் செய்ய முடியாமல் போனதே எனக்கிற வருத்தம் டாக்டருக்கு இருக்கிறது என்று பகிர்ந்து கொண்டனர் அவருக்கு நெருக்கமானவர்…

ஷாகுல்

படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.