சுயமரியாதை திருமணத்தை நடத்தி அசத்திய பிரேமலதா விஜயகாந்த் – திக்குமுக்காட வைத்த – விஜய் ரசிகர்கள் ! 

0

சுயமரியாதை திருமணத்தை  நடத்தி அசத்தியபிரேமலதா விஜயகாந்த் – திக்குமுக்காட வைத்த – விஜய் ரசிகர்கள் !

திருச்சியில் கடந்த 10.02.2023ஆம் நாள் வெள்ளிக்கிழமை தேமுதிக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கிழக்குறிச்சி கொ.தங்கமணி -த.கவிதா இவர்களின் மூத்த மகள் த.கதிர் அவர்களுக்கும், திருவரங்கம் வட்டம், விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி பொறுப்பாளர் மல்லாச்சிபுரம் த.கரிகாலன்-க.பிச்சைரெத்தினம் இவர்களின் மூத்த மகன் க.சுஜா அவர்களுக்கும், தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில், தந்தை பெரியார் அறிவித்த, பேரறிஞர் அண்ணா சட்டமாக்கிய சுயமரியாதை திருமண முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக நடைபெற்ற முழுமையான சுயமரியாதை திருணம் ஆகும்.

சுயமரியாதை திருமணத்தை  நடத்தி அசத்தியபிரேமலதா விஜயகாந்த் - திக்குமுக்காட வைத்த - விஜய் ரசிகர்கள் ! 
சுயமரியாதை திருமணத்தை  நடத்தி அசத்தியபிரேமலதா விஜயகாந்த் – திக்குமுக்காட வைத்த – விஜய் ரசிகர்கள் !

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் புஸி ஆனந்த், தேமுதிக கட்சியின் மாநில தலைவர் பிரேமலாதா விஜயகாந்த என இரண்டு அமைப்புகளின் ரசிகர்கள், தொண்டர்கள் திரண்டு திருச்சியை திக்குமுக்காட வைத்தனர். 

இத் திருமணத்தை நடத்தி வைக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தங்கியிருந்த SRM ஓட்டலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டார். வழியொங்கும் தேமுதிக கட்-அவுட்கள், பேனர்கள், முரசு சின்னம், கொடி, தோரணம் என அமைக்கப்பட்டு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக, திமுக என பெரிய கட்சிகளுக்கு பிரமாண்டமான மாநாடு பந்தல்கள் போடும் பந்தல் மாமுண்டி தான் திருமணத்திற்கான டெக்ரேஷன் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபம் வரை 5 கிலோமீட்டர் தொலைவிற்கு கொடி தோரணம் கட்ட விடாமல் போலிஸ் இரவு முழுவதும் தடுத்து நிறுத்தி, கடைசி நேரம் வரை திருமண வீட்டிற்கு  நெருக்கடி கொடுத்தனர்.

கொடி தோரணம்
கொடி தோரணம்

காலை 10.00 மணியளவில் திருமணம் நடைபெறும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தை வந்தடைந்தார். தேமுதிக மாநில நிர்வாகிகள், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை வரவேற்றார்கள். அப்போது, கேப்டன் விஜயகாந்த் வாழ்க என்றும் வீரமங்கை பிரேமலதா வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேனர்..
பேனர்..

திருச்சி தேமுதிக மாநகர மாவட்ட பொறுப்பாளர்கள் யாருமே கட்சியின் பொருளாளர் பிரேமலாதாவை வரவேற்று பேனர்களோ விளம்பரமோ எதுவும் வைக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.

(பல ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் மன்றத்தை சேர்த்த பழனிசாமி என்பவரின் திருமணம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற போது பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தியது கட்சியின் இடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது )

த.கதிர்-க.சுஜா இவர்களின் திருமணத்தை முழுக்கமுழுக்க சுயமரியாதை திருமண முறைப்படி பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார், முதலில் மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மணமகன் மணமகளுக்கு தாலி என்னும் மங்கலநாணை அணிவித்தார். அப்போது திருமண மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் “மணமக்கள் வாழ்க….. மணமக்கள் வாழ்க” என்று முழக்கமிட்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் மணமக்கள் திருமண உறுதி மொழியைப் படித்தனர்.

உறுதி மொழி
உறுதி மொழி
உறுதி மொழி
உறுதி மொழி

தொடர்ந்து வாழ்த்தரங்கம் நடைபெற்றது. ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மூத்த துணைத்தலைவர், தமிழ் மாநில வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்! தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தமிழ் மாநில செயலாளர்! சென்னை வட்டார ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் G.கிருபாகரன்  பேசும் போது…. முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் G.கிருபாகரன்
ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின்
பொதுச் செயலாளர் G.கிருபாகரன்

அப்போது, “இந்தத் திருமணத்தை நடத்தும் எங்கள் ஸ்டேட் வங்கி ஊழியர் கொ.தங்கமணி மிகுந்த ஆற்றலோடு செயல்படக்கூடிய தன்மை கொண்டவர். அவரின் மகன் திருமணம் சுயமரியாதை திருமண முறைப்படி நடந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இதை தேமுதிகவின் பொருளாளர், விஜயகாந்த் அவர்களின் துணைவியார் நடத்தி வைத்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். மணமக்கள் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டும்”

எங்கள் சங்கம் இந்தியாவிலே  அரசியல்கட்சியையை சாராத ஒரு சங்கம் என்கிற பெருமை, என் நடிகர் விஜயகாந்தை மிகவும் பிடிக்கும், இந்தியாவிலே தற்போது அரசியலில் இருக்கு பெண் ஆளுமைகள் இரண்டு பேர் தான் ஓருவர் மம்தா, இன்னோருவர்  பிரேமலதா விஜயகாந்த, வருங்காலத்தில் தமிழக முதல்வராக வாழ்த்துக்கிறேன் என்று பேசி எல்லோரையும் ஆர்ப்பரிக்க வைத்தார். 

தொடர்ந்து தேமுதிகவின் கொள்கைபரப்புச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மோகன்ராஜ்  மணமக்களை வாழ்த்தி பேசிய போது… . “அன்பு நண்பர் கொ.தங்கமணி விஜயகாந்த் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர். விஜயகாந்த் இரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திருந்து அவர் கேப்டன் அவர்களுடன் பயணித்து வருகிறார். அவரின் மகன் திருமணத்தைச் சீரோடும் சிறப்போடும் கழகத்தின் வீரமங்கனை அண்ணியார் அவர்கள் நடத்தி வைத்துள்ளார்கள். மணமக்கள் பல்லாண்டு வாழ்க” என்று வாழ்த்தினார்.

பெண்கள் அணிவித்த மாலை
பெண்கள் அணிவித்த மாலை

நிறைவாக, திருமணவிழாவிற்குத் தலைமை தாங்கிய பிரேமலதா விஜயகாந்த்  உரையாற்றினார்.“நமக்கு வழிகாட்டியாக இருக்கும் கேப்டன் அவர்களின் நல்லாசியுடன், இந்தத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இத்தகைய வாய்ப்பினை வழங்கிய தேமுதிகவின் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கொ.தங்கமணி அவர்கள் நம் பாராட்டுக்குரியவர். கொ.தங்கமணி அவர்கள் கேப்டன் அவர்களின் நம்பிக்கைக்குரியவர். விஜயகாந்த் இரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திருந்து இன்று வரை பயணம் செய்து வருகிறார். இடையில் வேறு கட்சிக்குச் சென்று, மீண்டும் தாய் வீடான தேமுதிகவிற்கு வந்தார். என்றாலும் கேப்டன் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் கொண்டவர் கொ.தங்கமணி. அவர் இப்போது கட்சியின் தேர்தல் பணிக்குழுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். அந்த அளவுக்குக் கேப்டன் அவர்களும் கொ.தங்கமணிக்குச் சிறப்பு செய்திருக்கிறார். இந்தத் திருமணம் சுயமரியாதை திருமண முறைப்படி நடந்ததாக எல்லாரும் இங்கே பேசினார்கள்.

 எனக்கும் கேப்டனுக்கும் சுயமரியாதை முறைப்படித்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகியோர் மதுரையில் திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

திருமண விழாவில் மணமக்கள் வீட்டார் சார்பில் பெண்கள் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு ஆளுர மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

புஸி ஆன்ந்த வாழ்த்து
புஸி ஆன்ந்த வாழ்த்து

அதன்பிறகு பிரமாண்டமான ரசிகர்களின் ஆரவாரத்துடன்  விஜய் மன்றத்தின் மாநில பொறுப்பாளர் புஸி ஆன்ந்த  திருச்சி மாநகர் முழுவதும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தமிழகம் முழுவதும் இருந்து மாவட்ட தலைவர் தலைவர் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்க நகைகளை அணிவித்து வாழ்த்தி சென்றார். 

திருமண விழாவில் பொதுமக்கள், உற்றார்-உறவினர்கள் என்று ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த அரசியல் கட்சி ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ, பழனியாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பெரிய சாமி உள்ளிட்ட பிரமுகர்கள், அதிகாரிகள், வியாபார சங்கத் தலைவர் என அனைவரையும் வரவேற்று தொழில் அதிபர் குடமுருட் T. சேகர் சால்வைகள் அணிவித்தார். பின்னர் திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. திருமணத்திற்கான முழு ஏற்பாடுகளையும், திருச்சி மாவட்ட முன்னாள் துணைசெயலாளர்  குடமுருட்டி சேகர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார்.

– ஆதவன்

Leave A Reply

Your email address will not be published.