தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு  !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு  !

 

போடியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏலக்காய் வியாபாரத்தில் முறைகேடு செய்த ஆவணங்கள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம், போடியில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் 7 குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அப்போது ஏலத்தோட்டங்கள் 5000 ஏக்கருக்கு மேல் சம்பத்@ஆறுமுகம் வாங்கியுள்ளதாக கேரளா அடிமாலியிலிருக்கும் முக்கிய ஆவணம் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசியல்வாதிகளின் கறுப்புப்பணத்தை அவர்களிடமிருந்து சம்பத் பெற்று ஏலத்தோட்டம் வாங்கி தனது ஏலக்காய் ஏல மையத்தில்   அதன் விளை பொருட்களை ஏலம்விட்டு அதன் மூலம் கருப்புப் பணத்தை அவர்களுக்கு ஒயிட்டாக்கித்தரும் வேலையை சம்பத் செய்வதால் இவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆவணங்கள் சிக்கி
ஆவணங்கள் சிக்கி
3

சம்பத் அஇஅதிமுக விலிருந்து திமுக விற்கு  வந்தவர் தனது மனைவி சந்தியா அஇஅதிமுக வின் சார்பில் வெற்றி பெற்று போடிநாயக்கனூருக்கு நகர்மன்றத்தலைவராக இருந்தவர். அதேபோல் சம்பத் திமுகவிற்கு கட்சி தாவிய பின்னும் தனது மனைவிக்கு சீட்டுக்காக முயற்சித்து தனது தம்பி சங்கரால் வீழ்த்தப்பட்டார். தனது தம்பி சங்கர் ஏலமையம் பதிவு செய்ய முயற்சித்த போது சம்பத் 500 முக்கிய அரசு அதிகாரிகளுக்கு புகாராக மெயில் அனுப்பி பரபரப்பாக்கினார். அந்த சண்டை இன்னும் நீடித்துக்கொண்டே இருப்பதாக கட்சி பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.

தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு !
தமிழக அமைச்சர்களை உலுக்க போகும் பல ஆயிரம் கோடி ஏலக்காய் முறைகேடு !
4

சம்பத்திற்கு  கேரளாவில் குஞ்சுதண்ணி எண்ணும் இடத்தில் சொகுசு பங்களா உள்ளது. அரசியல் பிரமுகர்கள் விருந்துக்கு தொடர்ச்சியாக சென்று வருவது வாடிக்கையாக உள்ளது.  சில சமயங்களில் முக்கியஸ்தர்கள் ஏடாகூடமாக இருக்கும் போது புகைப்படம் எடுத்து வைத்துள்ளதை காட்டியதாக சம்பத்தின் நண்பர்கள் மூலம் ரகசிய தகவல் கசிந்துள்ளது. அதில் தேனிமாவட்ட மற்றும் பிறமாவட்ட பிரமுகர்கள் போட்டோக்களும் அடங்கும் என்றனர்.

GST
GST

சம்பத் ஏலத்தோட்டத்தை வாங்க நடந்த பஞ்சாயத்திற்கு ஈரோட்டைச் சேர்ந்த கொங்கு மண்டல எம்எல்ஏ. வடக்கு மாவட்ட அமைச்சர்  ஓருவர், , டெல்டாவின் முக்கிய பிரமுகர்,  தூங்கா நகர் மாவடத்தின் அமைச்சர் ஆகியோர் 15.05.2022 அன்று நள்ளிரவு மதுரையிலிருந்து  போடிநாயக்கனூர் மாறுவேடத்தில் வந்துள்ளனர் அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். அன்றிரவு தூங்கா நகர் அமைச்சர் மற்றும்  குற்றவாளியும் பினாமி லைசென்ஸ் அதிபதியுமான சம்பத்தை சந்தித்து அவரின் வரிஏய்ப்பை கண்டுகொள்ளாமலிருக்க 50சி  அமைச்சர் பெற்றுச்சென்றதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

கம்பம்மெட்டு சாலை கிருஷ்ணன் கோவில் இடது புரம், உத்தமபாளையம் அரசு அரிசி கொடவுண் அருகில் மற்றும் தேவாரத்தில் பெருமாள் கோவில் அருகில் என  மூன்று இடங்கள் ராயப்பன்பட்டி, கோகிலாபுரம் மற்றும் போடியில் நான்கு  என பதினோறு இடங்கள் என பல அங்கீகாரம் இல்லாத கொடவுண்கள் சம்பத் என்ற ஆறுமுகத்திற்கு சொந்தமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில்  உள்ள ஏறாளமான பத்திரங்கள் பல லட்சம்கோடி பெறும் என வருமானவரித்துறை அதிகாரிகள்  சோதனையில் தெரியவந்துள்ளது.

வீடு
வீடு

1974-ல்திருச்சியிலிருந்து பிழைப்புத்தேடி ஏலக்காய் மூட்டைக்கு அடையாளக்குறி போட்டு கூலி வாங்கி வந்த சம்பத் போடியில் பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்யும் பல ஆயிரம் ஏக்கர் ஏலத்தோட்டம் வாங்கும் அளவிற்கு கருப்புப்பண அதிபதியானார். பல நூறு பினாமி  ஏலக்காய் லைசென்ஸ் வைத்து ஏலயமையம் CGF(Cardamom Growers Forever) உருவாக்கி கோடிக்கணக்கில்  அரசை ஏமாற்றி சம்பாதித்து வருகிறார்.

இதனை தமிழக  முதல்வர் அறிவாரா ? மத்திய அரசின் கவனம் போடி பக்கம் உள்ளதாகவும், தமிழக முதல்வருக்கு நெருக்கமான சிலரும் சம்மந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தமிழக அமைச்சர்கள் சிலரின் பெயர்களும் இதில் சிக்கும் என்கிறார்கள்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.