குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் பகுதியை சேர்ந்த ஜோசப்ராஜ் 34/25. த.பெ. செபாஸ்டியன்ராஜ் என்பவர் கடந்த 19.01.2026 கம்பரசம்பேட்டையில் உள்ள அணையில் குளிக்க சென்றபோது எதிரி விஜய் @ கோழி விஜய் 26/26 (திருக்கோகர்ணம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.251/19), த.பெ.சிவக்குமார். கிழக்குத்தெரு. திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக ஜோசப்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் கா.நி. குற்ற எண்.28/26. ச/பி. 109 (1) BNS ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரியான விஜய் @ கோழி விஜய் 26/26 (திருக்கோகர்ணம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.251/19), த.பெ.சிவக்குமார். கிழக்குத்தெரு. திருக்கோகர்ணம். புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மீது தடுப்புஅவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 07.02.2026-ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 09 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.