ஆலோசனை கூட்டத்தில் ஆடியோ சர்ச்சை ..! நடந்தது என்ன?
கிளை செயலாளர்கள் புகாரால் சிக்கலில் திமுக பெண் ஒன்றிய செயலாளர் ?
அமைச்சரும், வடக்கு மண்டல தி.மு.க பொறுப்பாளருமான எ.வ.வேலு நடத்திய 4- சட்டமன்ற தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், BLA2 எனப்படும் வாக்காளர்கள் தீவிர சீர்திருத்த பணி முகவர்கள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு , தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் அகரம் முரளி “ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம் ஆகியோரை மாற்ற கோரி 30-க்கும் மேற்பட்ட கிளைகழக நிர்வாகிகள் போர்கொடி தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் “திருப்பத்தூர்” மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில், திமுக 3 தொகுதிகளும், அதிமுக 1 தொகுதியையும் கைப்பற்றியது , இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், திருப்பத்தூர் ,ஜோலார்பேட்டை , தொகுதிகள் அடிசறுக்கலாமென்று தலைமையிடம் `பென் டீமும், உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் 6-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் திருப்பத்தூர் சேலம் சாலையில் உள்ள “YDK திருமண மண்டபத்தில்” ஆலோசனை நடத்தியிருக்கிறார், அமைச்சர் எ.வ.வேலு.

மண்டபம் அரங்கிற்குள் அமைச்சர் நுழைந்தவுடனே ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் “உமா கண்ரங்கம்” மீது திமுக கிளைகழக நிர்வாகிகள் புத்துகோயில் அண்ணாதுரை , மண்டலவாடி வெங்கடேசன் , பெத்தக்கள்ளுபள்ளி மோகன்ராஜ், கோபால் , சாரதி , ராஜா , செந்தமிழ் செல்வன் , தேவராஜ் ,சரிதா , சேட்டு , எஸ்.ராஜா , சபாபதி சம்பத், சிலம்பரசன் மற்றும். கே.ராஜா . சக்தி . டி.கோவிந்தராஜ் ,என 30-க்கும் மேற்பட்டோர் . சொந்த கட்சியினருக்கு போஸ்டிங் போடுவதில்லை. எங்களை மதிப்பதில்லை , அதிகார திமிரில் பேசுகிறார் , பகைக்கொண்டு பழி தீர்கிறார் , கோஷ்டி அரசியல் செய்கிறார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை கட்சியினருக்கு வழங்க மறுக்கிறார் , அங்கன்வாடி பணி நியமனத்தை கட்சியினருக்கு வழங்க மறுக்கிறார். திறமைசாலிகளுக்கு கட்சி பொறுப்பு வழங்குவதில்லை, போன்ற குற்றச்சாட்டுகளோடு , தனித்தனியாக புகார் கடிதங்களை நீட்டி அமைச்சருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.
என்ன நடந்தது என கூட்டத்தில் கலந்து கொண்ட சில நிர்வாகிகளிடம் பேசினோம்
கூட்டரங்கில் அமைச்சர் அமர்ந்தவுடன் , ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் “அகரம் முரளி” மற்றும் ‘குருவராஜபாளையம் பாஸ்கர் ‘ கூட்டரங்கில் நேரடியாக மோதிக்கொண்டனர்.
இன்னும் பலர் சேர்ந்து, ‘அகரம் முரளி , உமா கண்ரங்கம்’ ஆகிய இருவரையும் நீக்க வேண்டும் இல்லையென்றால், நாங்கள் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்வோம்’’ ஏக ரகளை செய்துள்ளனர்.
அப்போது, கதவுகள் இழுத்து பூட்டப்பட்டு . புகாருக்குள்ளான ஒன்றிய செயலாளர்கள் பிரச்சினையை மாவட்ட செயலாளரோடு ஆலோசித்து விட்டு முடிவு எடுப்பதாக கூறிவர் கூட்டத்தில் தொகுதிவாரியாக நிலவும் பிரச்னைகளை அடுக்கி, எம்.எல்.ஏ-க்களையும், கட்சி நிர்வாகிகளையும் கடிந்திருக்கிறார் எ.வ வேலு.
ஒவ்வொரு தொகுதி பற்றியும் ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு எ.வ.வேலு பேச, மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான தேவராஜ் , எம்எல்ஏக்கள் நல்லதம்பி . வில்வநாதன் உடன் வைத்துக்கொண்டு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளை அனுசரித்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். குறிப்பாக “திருப்பத்தூர் . ‘ஜோலார்பேட்டை” தொகுதி கைவிட்டு போகாமலிருக்க தொகுதி பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் அனுசரித்து செயல்பட வேண்டும் என்றாராம்.
உமா கண்ரங்கம் மீது புகார் கூறிய 30-க்கும் மேற்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் அமைச்சர் வேலுவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்கள்.
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியத்தை இரண்டாக பிரித்து இன்ஜினியர் வெங்கடேசனுக்கு கொடுக்க வேண்டும் 150 க்கும் மேற்பட்ட கிளை கழக நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக உள்ளார்கள் அப்பகுதியில் அவருக்கு தான் செல்வாக்கு இருக்கிறது அல்லது உமாவை மாற்ற வேண்டும் முரண்டு பிடித்துள்ளார்கள்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது தேவையா, நீங்களே பேசி சமாதனாமக போங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் கூறி விட்டதால் ஜோலார்பேட்டை தொகுதியை மீண்டும் பிடிக்க அதிமுக மாஜி மந்திரி கங்கனம் கட்டிக்கொண்டு இருப்பதால் திமுக மாவட்டத்திற்கு இது புது தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.

முன்னதாக ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம் , மாவட்ட மகளிர் தொண்டரணி வளைதள துணை அமைப்பாளர் சுதா பேசும் ஆடியோ ஒன்று வலம் வருகிறது.
அதில் … “மீட்டிங்கு ஏன் எனக்கு தகவல் செல்லவில்லை என்று சுதா” கேட்க ..
“உனக்கு பதிலாக மண்டலவாடி நாகேஷ் என்பவரை போட்டுவிட்டோம் , ஒரே ஊரில் இரண்டு பேரு இருக்க கூடாது, நீ மாவட்ட செயலாளருக்கு கீழ் வேளை பார்க்கிற , அங்கேயே பாரு, ஒன்றிய செயலாளரான எனக்கு கீழ் யாரு கட்டுப்பட்டு வேளை பார்க்கிறார்களோ அவர்களை வச்சு நான் பார்த்துக் கொள்கிறேன்.
உனக்கு காரணமெல்லாம் சொல்ல முடியாது, நீ தனியா அரசியல் செய்யற மாவட்ட செயலாளரிடம் போய் என்னவேனாலும் சொல்லிக்கோ போ … ! என உமா கண்ரங்கம் அதட்டுவதாக முடிகிறது அந்த ஆடியோ.
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கத்திடம் பேசினோம் …
ஆலோசனை கூட்டத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைப்பெறவே இல்லையே நீங்கள் வேண்டும் என்றால் எம்பி அண்ணாதுரையை கூட கேட்டு பாருங்கள் என ஒரு போடு போட்டார், சில நிர்வாகிகள் பெயரை குறிப்பிட்டு கேட்டபோது ஓ … அவங்களா அவங்க தேர்தல் வரும்போதெல்லாம் அப்படிதான் புகார் சொல்வார்கள் , திபாவளிக்கு கூட அத்தனை கிளை செயலாளர்களும் பரிசு பொருட்கள் வந்து வாங்கிட்டு தான் போனார்கள்.
நான் சாதாரனமாக இந்த இடத்திற்கு வரவில்லைங்க , எனக்கு எதிராக புகார் எழுதியவர்கள் அவர்களாக எழுதி இருக்க வாய்ப்பு இல்லை என்றவரிடம் ஆடியோ விவகாரம் குறித்து கேட்டோம் ஆடியோ அனுப்ப முடியுமா என்று கேட்டுவிட்டு மாவட்ட செயலாளர் சொல்வதை செய்கிறார் நான் சொன்னால் கேட்கமாட்டுகிறார் சுதா , ஒட்டுமொத்தமாக என்னை அரசியல் இருந்து அப்புறப்படுத்தவே இந்த சம்பவம் நடப்பதாக தெரிகிறது என முடித்துக் கொண்டார்.
சுதா பேசுகையில்….
மாவட்ட பொறுப்பில் இருப்பதால் எங்கள் ஒன்றிய செயலாளர். மாவட்ட செயலாளர் சொல்லும் கட்சி பணியை செய்கின்றேன் முதலவர் நிகழ்ச்சிக்கு என் தலையில் தொண்டர்களை திரட்டி கொண்டு சென்றேன் அதனால் தனி அரசியல் செய்கிறாயா என ஒன்றிய செயலாளர் உமா கோபப்பட்டார் , ஆண் ஆதிக்கம் இருப்பவர்கள் போல அவர் பெண் ஆதிக்கம் மிக்கவராக இருக்கிறார் , எனக்கு அரசியல் ஈடுபாடு அதிகம் பிடிக்கும் அதனால் கிளை செயலாளர் சொல்லும் கட்சி பணியை கூட செய்வேன் சார் , ஒன்றிய செயலாளர் தான் என்னை பிரித்து பார்க்கிறார் கட்சி பணி தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக பேசிய வருவதாலே ஆடியோ பதவி செய்தேன் வைத்திருந்தேன் ஆனால் எப்படி லீக் ஆனது தெரியவில்லை , எது எப்படி இருந்தாலும் அனைவரும் சேர்ந்து ஜோலார்பேட்டை தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்ற பாடுபடுவோம் என்றார்.
நூற்றுக்கணக்கான கிளை நிர்வாகிகள் பெண் ஒன்றிய செயலாளருக்கு எதிராக திரும்பி இருப்பதால் பல ஆயிர கணக்கான வாக்குகள் சிதறி போக வாய்ப்பு உண்டு. கடந்த முறையே வெறும் 1243 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் வெற்றி பெற்றார். கோஷ்டி உள்ளடி வேலைகளால் இந்த முறை ஜோலார்பேட்டை தொகுதியை திமுக தக்கவைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி குறி ? திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது.
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.