தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் ”தமிழ்ப் படைப்பாளர் ஆளுமை” விருது வழங்கும் விழா !
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை மற்றும் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் விருது மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, பல்கலைகழகத்தின் பனுவல் அரங்கில் மார்ச்-26 அன்று நடைபெற்றது.
தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அமுதா தலைமை வகிக்க, தமிழ்ப்பல்கலைக்கழக அயலகக்கல்வித் துறைத்தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரையோடு தொடங்கிய நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் தனது துணைவியார் மற்றும் தனது மூத்த புதல்வர் ஜீஜிபால் அவர்களுடன் கலந்து கொண்டதோடு விழாவின் துவக்க உரை நிகழ்த்தினார்.
பதிவாளர் பன்னீர்ச்செல்வம் பேராசிரியர்கள் இளையாப்பிள்ளை மேனாள் பதிவாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தேவஸ்தான இளவரசரின் பிறந்தநாளான இன்று (மார்ச்-26) பல்கலைக்கழகம் சார்பிலும், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பிலும். .. மூத்தகுடிமக்கள் நலச்சங்கத்தின் சார்பிலும் நல்லாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து அனைவராலும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் விழாவில் புலவர் ஆதி நெடுஞ்செழியனின் இரண்டு நூல்களை தஞ்சை தேவஸ்தான அறங்காவலர் திரு.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்கள் வெளியிட … தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலச்செயலாளர் திரு கவிஞர் செம்பியூரான் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பாண்டிச்சேரி மாநிலச்செயலாளர் திருமதி. வைஜெயந்திராஜனும் ஆகியோர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவின் முத்தாய்ப்பாக, தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் தமிழ்ச்செம்மல் புலவர் ஆதிநெடுஞ்செழியன் அவர்களுக்கு ” தமிழ்ப் படைப்பாளர் ஆளுமை” விருது வழங்கப்பட்டது. விருதினை தஞ்சை புதுக்கோட்டை , திருச்சி நுகர்வோர்நீதிமன்றத் தலைவர் நீதியரசர் டி.சேகர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்கள் .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழாவில் மூத்தகுடிமக்கள் நலச்சங்கத்தினர், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினர் அரிமா மற்றும் சுழற்சங்கத்தினர் சமூக ஆர்வலர்கள் தமிழறிஞர்கள், மாணவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அயலகக்கல்வித்துறை பேராசிரியர் பழனிவேல் நன்றியுரையோடு, விழா நிறைவு பெற்றது.