செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு குளித்தலையில் கலைஞர் கவிஞாயிறு விருது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு குளித்தலையில் கலைஞர் கவிஞாயிறு விருது – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் ரெ.நல்லமுத்து மற்றும் முனைவர் ஜா.சலேத். தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் தமிழ் இலக்கியங்களில் மனித உரிமை சிந்தனைகள், பெரியார், அண்ணா கலைஞர் படைப்புகள், திராவிட தமிழிய சிந்தனைகள் உள்ளிட்ட எண்ணற்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்கள்.

முனைவர் ஜா.சலேத்
முனைவர் ஜா.சலேத்

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

கலைஞர், கவிக்கோ அப்துல்ரகுமான், மலேசிய தமிழ்ப் படைப்பாளர்கள் உள்ளிட்ட பொருண்மைகளில் பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்திய அனுபமிக்கவர்கள். மாணவர்களை சமூகப் பற்றாளர்களாகவும் படைப்பாளர்களாகவும் உருவாக்கும் முயற்சியில் பல முன்னெடுப்புகளை எடுக்கக்கூடியவர்கள். இவர்களின் ஆய்வு மற்றும் இலக்கியப் பணிகளைப் பாராட்டி, குளித்தலை தமிழ்ச்சங்கம் “கலைஞர் கவிஞாயிறு விருது” என்னும் விருதை வழங்கிப் பாராட்டியுள்ளது.

குளித்தலையில்
குளித்தலையில்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கலைஞரின் மறைவின்போது முனைவர் ஜா.சலேத் எழுதிய “கண்ணை மூடிய சூரியனே!” என்ற பாடல் உள்பட 100 கவிஞர்களின் கலைஞர் குறித்தக் கவிதைகள் அடங்கிய நூலை வெளியிட்டு, விருதாளர்களுக்கு “கலைஞர் கவிஞாயிறு விருது – 2024” விருதை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ. அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.

நினைவு பரிசு
நினைவு பரிசு

அவர் உரையில், தமிழ்ச் சமுதாயம் எப்படிப்பட்ட வளர்ந்த சமூகமாக உருவாக வேண்டும் என்கிற இலக்கில் எண்ணற்ற வியக்கத்தக்கத் திட்டங்களைத் தீட்டி, அதை செயல் வடிவாக்கி தமிழகத்தின் நவீன சிற்பியாக விளங்கியவர் கலைஞர் அவர்கள். நாளைய சமுதாயத்தை இலக்கியத்தால், ஆய்வால், கல்விப் பணியால் உருவாக்குகிற மாமனிதர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு கலைஞர் பெயரால் விருது வழங்குவது போற்றுதலுக்குரியது. முயற்சியை சிறப்பாக முன்னெடுத்திருக்கிற குளித்தலை தமிழ்ச் சங்கத்தை மனதார வாழ்த்துவதோடு விருதாளர்களையும் வாழ்த்தி மகிழ்வதாக குறிப்பிட்டார்.

இவ்விழாவை கவிஞர் கோ (பேராசிரியர். கோபாலக்கிருஷ்ணன்) மற்றும் குளித்தலை தமிழ்ச்சங்கத்தினர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.