விருதுகளை குவித்த JCI ராக்டவுன் !
திருச்சி, துறையூரில் ஜனவரி 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்ற LOTS 2026 தேசிய மாநாட்டில் (Leadership Orientation & Training Seminar – 2026) சிறப்பான செயல்பாடுகளுக்காக JCI ராக்டவுன் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில், JCI ராக்டவுன் அமைப்பிற்கு “சிறந்த ஆண்டு திட்ட திட்டமிடல் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு” (Best Annual Project Planner and Budget Preparation) விருது வழங்கப்பட்டது.
மேலும், LOTS 2026 மாநாட்டில் சிறப்பான பங்கேற்பும், தலைமைத் திறனும் வெளிப்படுத்தியதற்காக JCI ராக்டவுன் தலைவர் டாக்டர் S. முத்துக்குமார் அவர்களுக்கு “சிறந்த தன்னம்பிக்கை கொண்ட தலைவர்” (Outstanding Confident President) விருது வழங்கப்பட்டது.
அதேபோல், மாநாட்டில் சிறந்த பங்கேற்புக்காக Jc. அறிவழகன் அவர்களுக்கு “சிறந்த பங்கேற்பாளர்” (Outstanding Participant) விருது வழங்கப்பட்டது.
மேலும், குழுப் பணித் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக டாக்டர் S. முத்துக்குமார் மற்றும் Jc. அறிவழகன் ஆகியோருக்கு “சிறந்த குழு கட்டமைப்பு போட்டி” (Outstanding Team Building Competition) விருது வழங்கப்பட்டது.
அதேநேரத்தில், JCI ராக்டவுன் அமைப்பின் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் சிறப்பாகப் பதிவிட்டு பரப்பியதற்காக PR குழுவைச் சேர்ந்த Jc. பிரியங்கா, ரஞ்சித் குமார் மற்றும் வைரப்பெருமாள் ஆகியோரின் பணியை LOTS 2026 குழுவினர் பாராட்டினர்.
இந்த விருதுகள் JCI ராக்டவுன் அமைப்பின் ஒருங்கிணைந்த குழுப் பணியும், திறமையான தலைமையும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றதைக் காட்டுகிறது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.