இராமர் கோயில் திறப்புவிழா அழைப்பை நிராகரித்த காங்கிரஸ் கட்சி !
ராமர் கோவில்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. அயோத்தியில் ரூ.1800 கோடியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற 15-ஆம் நாளுக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் 16-ஆம் நாள் பிரான் பிரதிஷ்தா (சிலை பிரதிஷ்டை) பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ஆம் நாள் வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிர, 2,200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது. காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எதிர்க்கட்சியாகக் கருதப்படும் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களான காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ,அயோத்தியில் ராமர் கோவில் விழாவில் சோனியா காந்தி, கார்கே பங்கேற்க மாட்டார்கள் எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க
வரும் 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பிதழைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கடந்த மாதம் பெற்றனர்.
நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலைத் திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமர் கோயில் திறப்புவிழா அழைப்பை காங்கிரஸ் நிராகரித்தை வடஇந்தியாவில் உள்ள மக்கள் மதசார்பின்மையைப் போற்றுவார்களா? மதசார்பை போற்றுவார்களா? என்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும்.
-ஆதவன்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending