வீடு கட்ட அனுமதிக்கு ரூ. 40ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் கைது !

0

ரூ. 40ஆயிரம் லஞ்சம் வாங்கிய  பஞ்சாயத்து தலைவர் கைது !

குத்துக்கல்வலசை பஞ்சாயத்து
குத்துக்கல்வலசை பஞ்சாயத்து

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

தென்காசி குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சத்யராஜ் (வயது 39). வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன. குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரஜினிஷ்பாபு வீடு கட்டும் பணியை மேற் கொண்டுள்ளார்.

வீடு கட்டுவதற்கான அனுமதி பெற நந்தனா விண்ணப்பித் திருந்தார். அனுமதி வழங்க ரூ. 46 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று ரஜினிஷ் பாபுவிடம் பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதனால் ரஜினிஷ்பாபு தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி. எஸ். பி. பால்சுதனிடம் புகார் தெரிவித்துள்ளார். டிஎஸ்பி தலைமையில்  ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ. 46 ஆயிரத்தை இன்று 10.01.2024  ரஜினிஷ்பாபு பஞ்சாயத்து தலைவர் சத்யராஜிடம் கொடுத்துள்ளார்.

4 bismi svs

பணத்தை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் ரூ. 40 ஆயிரம் போதும் என கூறி ரூ. 6 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பஞ்சாயத்து அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதன், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அலுவலகத்திற் குள் லஞ்சம் பெற்ற பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காண்ட்ராக்டர் சவுந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்து லஞ்ச பணம் ரூ. 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

 

ஆயிரங்களில் ஆசை ! ஆயுசு முழுவதும் அவமானம் – ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜி.மணிகண்டன் நேர்காணல்!

லிங்

ஆயிரங்களில் ஆசை ! ஆயுசு முழுவதும் அவமானம் – ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜி.மணிகண்டன் நேர்காணல்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.