குளித்தலை அய்யர்மலை ரோப் கார் விவகாரம் – கூடுதல் ஆணையர் திருமகள் 12 வல்லுனர் குழுவினருடன் நேரில் வந்து ஆய்வு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலை அருகே அய்யர்மலை, ரத்தின கிரீஸ்வரர் கோயில் ரோப் கார் சேவையை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வல்லுனர் குழுவினருடன் நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார்.

ayyarmalai rope car
ayyarmalai rope car

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9.10 கோடியில் ரோப்கார் அமைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 24 ஆம் தேதி புதன்கிழமை காலை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இது பக்தர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து 25 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் திடீரென வீசிய சுழல் காற்றால், ரோப்கார் சக்கரம் திடீரென நழுவ துவங்கி பழுது ஏற்பட்டது. இதனை அடுத்து ரோப்காரில் பயணித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை மற்றும் செயற்பொறியாளர் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அய்யர்மலை வந்து ரோப்கார் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வினை மேற்கொண்டனர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

குளித்தலை அய்யர்மலை
குளித்தலை அய்யர்மலை

பின்னர் ரோப்கார் சேவை அலுவலர்களிடம் விசாரணை செய்தனர். இதனை அடுத்து அவர்களே ரோப்காரில் நேரடியாக பயணித்தனர். இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ரோப்கார் சேவையை ஆய்வு செய்ய கூடுதல் ஆணையர் திருமகள் தலைமையில் வல்லுனர் குழுவினரை அமைத்து உத்தரவிட்டார்.

குளித்தலை அய்யர்மலை ரோப் கார் விவகாரம்
குளித்தலை அய்யர்மலை ரோப் கார் விவகாரம்

இதனை அடுத்து தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை கூடுதல ஆணையர் திருமகள் தலைமையில் 12 பேர் அடங்கிய வல்லுனர் குழுவினர் அய்யர்மலை ரோப் கார் சேவை வந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில், சென்னை ஐஐடி பொறியாளர் சுந்தர்ராஜன், அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர் சண்முகசுந்தரம், சென்னை தரமணி கட்டுமான வல்லுனர் டாக்டர் பழனி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிகண்டன், இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, மணிகண்டன், மின் பொறியாளர் தியாகராஜன், மின் ஆய்வாளர் பழனிச்சாமி, பழனி கோவில் செயற்பொறியாளர் நாச்சிமுத்து பொறியாளர், பழனி பொறியாளர் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய 12 பேர் குழுவினர் வந்துள்ளனர்.

நௌஷாத்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.