புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

த்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐம், ஐஐஐடி, என்ஐடி (IIT,IIM,IIIT,NIT) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்இன (BC,MBC/DNC) மாணவ, மாணவியர்கள் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்க்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (FRESH & RENEWAL APPLICATIONS) விண்ணப்பித்தல்”

தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐம், ஐஐஐடி, என்ஐடி (IIT,IIM,IIIT,NIT) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிவ,மிபவ,மற்றும் சீ.ம வகுப்பை (BC,MBC/DNC)  சார்ந்த மாணவ/மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்புகட்டணம், தேர்வுகட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய காரணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு, 2024-2025 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications)  விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-05./மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-05 அல்லது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes  என்ற இணையதள முகவரியலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கல்வி உதவித்தொகை
கல்வி உதவித்தொகை

மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான புதியது (FRESH)  மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணக்கர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பித்தினை பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்து புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2024 க்குள்ளும் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2025க்குள்ளும் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புகட்டடம், 2 வதுதளம், சேப்பாக்கம், சென்னை– 05. தொலைபேசிஎண் : 044 – 29515942 ,

மின்னஞ்சல் : tngovtiitscholarship@gmail.com            

மேற்கண்ட விவரப்படி மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.