அதிக நேர உடற்பயிற்சியால் அகால மரணமடைந்த ஜிம் உாிமையாளா்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்ற மகாதிர் மகமுத் (வயது 35). இவர் 31-வது வார்டு தி.மு.க. முன்னாள் செயலாளர். குகை ஆற்றோர வடக்கு தெருவில் சொந்தமாக ஜிம் (உடற்பயிற்சி நிலையம்) வைத்து இருந்த ஜிம் உரிமையாளர் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால்  பரிதாபமாக இறந்தார். குளியல் அறையில் பிணமாக கிடந்தார்.

இவர், தினமும் அவருடைய  ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு சென்று விட்டனர். இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

பின்னர் ஜிம்மில் உள்ள குளியல் அறையில் குளித்தார். வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய கார் டிரைவர் முஸ்தபா ஜிம்முக்கு சென்று பார்த்தார். அங்கு அவர் இல்லை. சந்தேகம் அடைந்த அவர் குளியல் அறையை பார்த்தபோது அது உள்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. குளித்துக் கொண்டிருப்பார் என்று சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் அவர் குளிப்பதற்கான எந்தவித சத்தமும் கேட்கவில்லை.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இதனால் சந்தேகம் அடைந்த முஸ்தபா  குளியல் அறை கதவை தட்டினார். பதில் இல்லை. இதையடுத்து அவர் சத்தம் போட்டார். அருகில் இருந்தவர்கள் ஜிம்மிற்கு ஓடி வந்தனர். அவர்கள் குளியல் அறை கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது தலை மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் சேட்டு மூச்சுபேச்சு இல்லாமல் அசை வின்றி தரையில் கிடந்துள்ளார். உடனே டிரைவா் முஸ்தபா மற்றும்  அங்கிருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு அவரை தூக்கிக்கொண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோ தித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்த சேலம் போலீசார் ஜிம்மிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்று கூறினர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுகுறித்து அவருடைய நண்பர்கள் கூறும்போது, தினமும் கடினமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை ஆணழகன் போல் கட்டுக்கோப்பாக வைத் திருந்தார். அதிகப்பட்சமாக 150 முதல் 200 கிலோ வரை எடை’ தூக்குவார் என்றனர்.

இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சேட்டு திருமணமாகி அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.