காமத்தைப் பற்றி பேசினாலே அந்த பெண் Bad Girl-ஆ?
பெண்கள் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பீடி, சிகரெட், கஞ்சா, அபின், சாராயம் என்று எந்த கெட்ட பழக்கவழக்கங்களும் இருக்க கூடாது. அப்போது தான் நல்லமுறையில் பிள்ளைகளை பெற்று (Reproduction) இந்த பூமியில் மனிதர்களின் வாழ்வை நிலைநிறுத்த முடியும்.!
எனவே, பெண்கள் அடக்க ஒடுக்கமாக, கன்னி கழியாமல் கற்போடு இருக்க வேண்டும். தலை நிமிர்ந்து நடக்க கூடாது. ஆண்களோடு அதிகம் பேசக் கூடாது.!
இதைத்தான் எல்லா மதங்களும் மதத் தலைவர்களும் கட்டாயப்படுத்துகின்றனர்.!
பெரியாரிய தோழர் Annamalai Arulmozhi அவர்கள் கூறியது,
இந்த பூமியில் மனிதர்களின் வாழ்வை உறுதிப்படுத்த பெண்கள் மட்டுமே ஒழுக்கமாக இருக்க வேண்டுமா. ஆண்கள் இருக்க கூடாதா.!
பீடி, சிகரெட் புகைத்து விட்டு, பா**பராக் மென்று, சாராயம் குடித்துவிட்டு மனைவிகளின் அருகில் சென்றால், அவர்களுக்கு அருவருப்பாக இருக்காதா.!
நிற்க.
காமம் என்பது வயிற்று பசியை போன்றது தான். அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான தேவைதான். இத்தனை ஆண்டுகளாக ஆண்கள் வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர். இப்போது பெண்களும் அந்த தேவையை, நண்பர்களுடன் விவாதமாக வெளிப்படுத்துகின்றனர்.!
காமத்தைப் பற்றி பேசினாலே, அந்த பெண் எல்லோரிடமும் கலவி வைத்துக்கொள்ள முற்படுகிறாள் என்ற பொருள் இல்லை.!
காமத்தைப் பற்றி பேசும் எல்லா ஆண்களும் திருமணத்திற்கு முன்பாக கலவி வைத்துக் கொண்டதில்லையே. ஒழுக்கமானவர்கள் என்று சொல்லவில்லை, வாய்ப்பு அமையாததால் கூட இருக்கலாம்.!
ஒருசில ஆண்கள் மட்டுமே திருமணத்திற்கு முன்பும் கலவியில் ஈடுபடுபடுபவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப் படுகிறதா, இல்லையே.!
ஒருவேளை, 1970க்கு முன்பு 14 வயதில் பெண்களுக்கும், 18 வயதில் ஆண்களுக்கும் திருமணம் நடந்ததால், காமத்தேவைப் பற்றி பெண்கள், வெளிப்படையாக பேசாமல் இருந்திருக்கலாம்.!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் 25-35 வயதில்தான் திருமணம் நடைபெறுகிறது. இந்த வயதிலும் தனது இயற்கையான காமத் தேவையை நிவர்த்தி செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.!
உடனே சங்கிகள் வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுகின்றன.!
இந்த பெண்கள் எல்லாம் பெரியார் பேத்திகள் என்ற நக்கல் வேறு.!
ஆண்கள் சுதந்திரமாக இருப்பது போன்று பெண்களும், தங்களுடைய சுதந்திரத்தை விரும்புகின்றனர். அதே வேளையில் தங்களுடைய பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்கின்றனர். அல்லது இந்த சமூகம் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.!
அதை விட்டு விட்டு அவர்களை தனிமைப்படுத்த (Branding) முற்படுவது சமூக தீவிரவாதம்.!
— கந்தசாமி மாரியப்பன்.